1. செய்திகள்

TNAU மாணவர் சேர்க்கையை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இங்கே!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
tnau admission

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கையை துவக்கியுள்ளது. வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாணவர் சேர்க்கையானது ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விடியோ மற்றும் கையேடு வாயிலாக வழிமுறைகளையும் வழங்கியுள்ளது. 

ஆன்லைனில் மாணவர் சேர்க்கை - TNAU UG online admission

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கிவரும் 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பத்து இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு இந்தாண்டுக்கான மாவணர் சேர்க்கை துவங்கியுள்ளது. இதனை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் நீ. குமார் இணையதளவாயிலாக துவக்கிவைத்துள்ளார்.

இளங்கலை பாடப்பிரிவுகள் - Degree Courses

இளங்கலை பாடப்பிரிவுகளான, இளமறிவியல் (மேதமை) வேளாண்மை, இளமறிவியல் (மேதமை) தோட்டக்கலை, இளமறிவியல் (மேதமை) வனவியல், இளமறிவியல் (மேதமை) உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், இளம் தொழில்நுட்பம் (வேளாண் பொறியியல்), இளமறிவியல் (மேதமை) பட்டுவளர்ப்பு, இளம் தொழில் நுட்பம் (உணவு தொழில் நுட்பம்), இளம் தொழில்நுட்பம் (உயிரித் தொழில்நுட்பம்), இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுச் சூழல் பொறியியல்) மற்றும் இளமறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை) ஆகியவற்றிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

tnau online admission

மானவர் சேர்க்கை விதிமுறைகள் - Students to Follow

  • இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை முழுவதும் ஆன்லைன் மூலமே நடைபெறும் என்றும் அச்சிடப்பட்ட விண்ணப்பம் பயன்பாட்டில் இல்லை என்றும் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

  • ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பங்ளை செப்டம்பர் மாதம் 18,19,மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஆன்லைமூலம் திருத்திக்கொள்ள வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

  • பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 17.09.2020 மற்றும் தரவரிசைப்பட்டியல் 29.09.2020 அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்திற்கு தேவையான விபரங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத்தை www.tnauonline.in என்ற இணையதளம் வாயிலாகபதிவேற்றம் செய்யலாம்.

  • மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களை அறிந்துகொள்ள www.tnau.ac.in இணையதளத்தில் உள்ள தகவல் கையெடு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெளிவு பெற 0422-6611322, 0422-6611328, 0422-6611345, 0422-6611346 ஆகிய தொலைபேசி உதவிச் சேவை எண்களை அனைத்து வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு கணினி சேவை மையங்களை தொடர்பு கொண்டும் இணைய தளவாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

ஆன்லைன் வழிமுறைகள் - Guidelines to apply online

ஆன்லைமூலம் விண்ணப்பிக்கும் முறை குறித்து வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து வீடியோ 

மானவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஏனைய விவரங்களுக்கு இதை கிளிக் செய்யுங்கள்

தகவல் கையேடு - Information Brochure

மேலும் படிக்க...

இ- பாஸ் நடைமுறையில் வரும் 17-தேதி முதல் தளர்வுகள் - முதல்வர் அறிவிப்பு!!

விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அரசு தடை

தரமான காய்கறி விதைகள் உற்பத்திக்கு மானியம் - தோட்டக்கலைத் துறை!!

English Summary: Here are the steps to apply for TNAU Student Admission Online Published on: 14 August 2020, 06:22 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.