1. செய்திகள்

மதுரை தடகள வீராங்கனை ரேவதி நடப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி.

T. Vigneshwaran
T. Vigneshwaran

மதுரை மாவட்டத்தை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி நடப்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். 22 வயதான ரேவதி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவுள்ள சூழலில், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி 400 மீட்டர்கள் மற்றும் ரிலே ஓட்டங்களில், பல தேசிய மற்றும் பல்கலைக்கழக சாதனைகளை முறியடித்துள்ளார். இவர் ஒலிம்பிக்கில் 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். ரேவதி ஷூ கூட அணியாமல் வெறும் காலில் பயிற்சி செய்து தனது ஒலிம்பிக் கனவை நினைவாக்கியுள்ளார்.

இவர் சிறுவயதில் பெற்றோரை இழந்த இவர் தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து இந்த கனவை அடைந்தலுள்ளார். ஜுனியர், சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் வெற்றிகளை குவித்த ரேவதி தற்போது டோக்கியோ செல்கிறார். 

ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வகையில் தான் உறுதியாக தேர்வு செய்யப்படுவேன் என்று நம்பிக்கையாக உள்ளார் ரேவதி. இவர், ஏற்கனவே பல சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார். நேற்று முன்தினம் நடந்த தகுதிச்சுற்று போட்டியில் 400 மீட்டர் போட்டியின் இலக்கை 53.55 விநாடிகளில் மட்டுமே  கடந்து ரேவதி புதிய சாதனை படைத்துள்ளார். 

மேலும் படிக்க:

ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய தமிழக அரசின் அதிரடி உத்தரவு!!

Breaking News:தமிழகத்தில் கொரோனா தொற்றால் 3,715,54 பேர் பலி.

தமிழகத்தில் 6 வாரங்களுக்கு பிறகு பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

English Summary: Madurai athlete Revathi qualifies for current Olympics Published on: 06 July 2021, 03:20 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.