1. செய்திகள்

பெட்ரோல் விலை ₹125 வரை அதிகரிக்கும்- வல்லுநர்களின் கூற்று

T. Vigneshwaran
T. Vigneshwaran

அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக, உலகம் முழுவதிலும் உள்ள வல்லுநர்கள் கச்சா எண்ணெய் விலை $100 வரை அதிகரிக்கும் நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சாமானிய மக்களை பாதிக்கிறது என்பதை மறுக்க இயலாது. தற்போது, ​​நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கு உள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 98.88 ரூபாய் என்ற விலையிலும், டீசல் விலை லிட்டருக்கு 92.89 ரூபாய் என்ற விலையிலும் விற்கப்படுகிறது. இந்நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வகையில், உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள், கச்சா எண்ணெய் விலை $100 வரை அதிகரிக்கும் என்று கருதுகின்றனர்.

OPEC+ நாடுகளின் கூட்டம் மீது உலக கவனம்

கச்சா எண்ணெய் கடந்த ஒரு வருடத்தில் பீப்பாய் விலை $ 26 வரை உயர்ந்தது. 2020 ஜூன் மாதம், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 40 டாலர் என்ற விலையில் கிடைத்தது, இன்று  கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 76 டாலருக்கும் அதிகமாக வர்த்தகம் செய்யப் படுகிறது. உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை  உள்ளது. இப்போது அனைவரின் கவனமும் ஜூலை 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஒபெக் + நாடுகளின் கூட்டத்தில் இருக்கிறது. மேலும்,உற்பத்தி கொள்கை தொடர்பான முடிவு ஆகஸ்டில் எடுக்கப்படும். கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதில் ரஷ்யா ஆதரவளிக்கிறது.

பெட்ரோல் விலை ரூ.125 ஐ தாண்டும்

ஒபெக் + நாடுகள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்கும் முடிவை எடுத்தால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படுமா அதிகரிக்கப்படுமா என்பது  குறித்து எண்ணெய் நிபுணர் அரவிந்த் மிஸ்ரா, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவதற்கு முன்னரே, எண்ணெய் கொள்முதலில், வருவாய் ஏதும் இல்லாத நிலை தான் இருக்கிறது. கச்சா எண்ணெய் விலைகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல் விலை ரூ.125 வரை செல்ல வாய்ப்பு உண்டு. குறைவதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் 100 டாலர் வரை செல்லலாம்

கச்சா எண்ணெய் விலை ஜூன் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் விலை 76 டாலரை எட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் கச்சா விலை பீப்பாய்க்கு 100 டாலரை எட்டும் என்று பாங்க் ஆப் அமெரிக்கா கணித்துள்ளது. மற்றொரு  பெட்ரோல் ஏஜென்சியான கோல்ட்மேன் சாச்ஸ், கச்சா எண்ணெய் விலை  இந்த ஆண்டின் இறுதியில் பீப்பாய்க்கு 80 டாலர்  என்ற அளவை எட்டலாம் தெரிவித்தது.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒப்பந்தம்

ஈரான் மீதான அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் கச்சா எண்ணெய் விளையும் அதிகரித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால், அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை நீக்க  கூடும். ஈரான் எண்ணெய் விநியோகத்தை அமேம்படுத்தினால், விலை சிறிது குறையலாம்.  ஆனால் இரு நாடுகளின் அறிக்கைகளும்  வித்யாசமாக உள்ளன. எனவே, எண்ணெய் சப்ளை உடனடியாக அதிகரிக்குமா என்பது இன்னும் தெளிவாக இல்லை.

மேலும் படிக்க:

சதம் அடித்த பெட்ரோல் விலை-கொடைக்கானலில் ரூ.102க்கு விற்பனை!

தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100க்கு அருகே

ஓராண்டில் இருமடங்காக உயர்ந்த சமையல் எண்ணெய் விலை

English Summary: Petrol price to go up to ₹ 125:experts says. Published on: 25 June 2021, 01:00 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.