1. செய்திகள்

பாதிப்பு அடிப்படையில் ஊரடங்கு தளர்வு -மாவட்ட அளவில் செயல்படுத்த நிபுணர் குழு பரிந்துரை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Recommendation of expert committee to implement curfew relaxation at district level
Credit : Business Standard

தமிழகத்தில் மாவட்டந்தோறும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு அடிப்படையில், ஊரடங்கு தளர்வைப் படிப்படியாகச் செயல்படுத்தலாம் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

7ம் தேதி வரை நீட்டிப்பு (Extension until the 7th)

கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தொற்று பாதிப்பு குறையாததையடுத்து பின்னர் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு வரும் 7 ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தடையின்றிக் கிடைக்க (Available unrestricted)

ஊரடங்கு அமலில் இருந்தாலும், பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி, மற்றும் மளிகைப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

முதலமைச்சர் சூசகம் (Chief Minister's hint)

இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மக்கள் கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று சூசகமாகத் தெரிவித்தார். இதையடுத்து ஊரடங்கில் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை (MK Stalin's advice)

அதேநேரத்தில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ மற்றும் நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் அவர்கள் கொரோனா நடவடிக்கைகள் குறித்து தங்களது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறார்கள்.

நிபுணர் குழு பரிந்துரை (Recommended by the Expert Panel)

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

சீராகக் குறையவில்லை (Did not decrease steadily)

தமிழகம் முழுவதும் மூன்று வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக சீரானத் தொற்றுப் பாதிப்பு குறையவில்லை.இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கை தளர்த்துவது என்பது கடினமானது என்று நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு காலகட்டத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருவதையும், மருத்துவ நிபுணர் குழுவினர் சுட்டிக்காட்டி உள்ளனர்.

நிபுணர்களின் பரிந்துரைகள் (Recommendations of experts)

சென்னை மண்டலத்தில் பாதிப்புகள் வெகுவாக குறைந்துவிட்டாலும் மேற்கு மண்டலத்தில் சில பகுதிகளில் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவையில் குறைகிறது (Decreases in Kovai)

மண்டலத்துக்குள்ளே ஈரோட்டில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் கோவையில் தொற்று பாதிப்பு குறையத்தொடங்கி இருக்கிறது.

நீட்டிப்பு தேவையில்லை (No extension required)

குறைந்த தொற்று விகிதம் மற்றும் காலியான மருத்துவமனை வார்டுகளைக் கொண்ட ஒரு மண்டலத்தில் ஊரடங்கை நீட்டிப்பதில் அர்த்தமில்லை.

முடிவு தேவை (Results are required)

சுகாதார கொள்கைகள் பொருளாதார உணர்வையும் ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அளவிலான தொற்று நோய் காரணிகளின் அடிப்படையில் தடைகளை நீட்டிப்பது அல்லது குறைப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

காரணிகள் (Factors)

அதிக தொற்று விகிதம், பாதிப்பு அல்லது பலி எண்ணிக்கை அதிகரித்து மருத்துவமனைகளுக்கு அதிக நோயாளிகள் வருவது ஆகியவை, கட்டுப்பாடுகளை தீர்மானிக்கும்போதுக் கருத்தில் கொள்ள வேண்டிய சிலக் காரணிகள் ஆகும்.

தளர்வுகள் (Relaxations)

வெவ்வேறு மாவட்டங்களில் தொற்று பாதிப்பில் வித்தியாசங்கள் நிலவுவதால் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வைப் படிப்படியாக அமல்படுத்தலாம். முதலில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகளை அறிவிக்கலாம்.

முயற்சி தேவை (It takes effort)

அதேவேளையில் கொரோனா 3-வது அலை மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களைக் கையாள, மாவட்டங்கள் முழுவதும் படுக்கைகள் மற்றும் மனித வளங்களை அதிகரிக்க அரசு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

கொரோனா நிவாரண நிதி: ரூ.2000 பெறாதவர்கள் இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம்!!

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற மரக்கன்றுகளை நடும் இளைஞர்கள்!

300 கிலோ உரத்தை 5 டன் உரப் பயன்பாட்டுக்கு சமமாக மாற்றுவது எப்படி?

English Summary: Recommendation of expert committee to implement curfew relaxation at district level Published on: 03 June 2021, 05:14 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.