1. செய்திகள்

பின்னலாடை தொழில் துறைக்கு, மானியத்தோடு தனி வாரியம் அமைக்க கோரிக்கை!

KJ Staff
KJ Staff
Credit : Hindu Tamil

திருப்பூர் மாவட்டத்தின், அசுரவேக வளர்ச்சிக்கு முழு முதற் காரணம், பின்னலாடை உற்பத்தி (Textile production) துறையினர், என்று சொல்வதில் துளியும் மிகையில்லை. திருப்பூர் பின்னலாடை துறையில், ஏற்றுமதி (Export) மூலம், ஆண்டுக்கு, 26 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், உள்நாட்டுக்கான ஆடை வர்த்தகம் நடக்கிறது. வெளி மாவட்டம், பிற மாநிலங்களை சேர்ந்த, 8 லட்சம் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இந்த அசுர வளர்ச்சிக்கு ஏற்ப, தேவைபட்டியலும் நீண்டுக் கொண்டே போகிறது. அவற்றை, முதல்வர் நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கையில், இன்று, அவருடன் கலந்துரையாட உள்ளனர், திருப்பூர் தொழில் துறையினர்.

கோரிக்கைகள் என்னென்ன?

பின்னலாடை தொழிலாளர் பயன்பாட்டுக்காக, அடுக்குமாடி குடியிருப்பு வசதி. பெண்கள் தங்கும் விடுதி ஏற்படுத்த வேண்டும். வீரபாண்டி, நெருப்பெரிச்சல் பகுதிகளில் உள்ள குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். தொழிலாளர்களின் மருத்துவ சேவைக்காக, ஏற்கனவே அடிக்கல் நாட்டிய இடத்தில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை (ESI Hospital) அமைக்க வேண்டும். கடந்த, 2011ல், சாய ஆலைகள் மூடப்பட்டு, பின்னலாடை தொழில் முடங்கியபோது, தமிழக அரசு, பொது சுத்திகரிப்பு மையங்கள் (General Purification Centers) அமைக்க, சாய ஆலை துறையினருக்கு, 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் (Interest free loan) வழங்கியது.

credit : News18

மானியம் வேண்டி கோரிக்கை:

கடன் தொகையை, மானியமாக (Susidy) அறிவிக்க வேண்டும். சாய ஆலை உட்பட ஆயத்த ஆடை துறை சார்ந்த நிறுவனங்கள் சூரிய ஒளி மின் உற்பத்தி (Solar power generation) கட்டமைப்புகளை நிறுவ, மானியம் வழங்க வேண்டும். புதுமையான ஆடை ரகங்களை உருவாக்கி, வர்த்தக சவால்களை எதிர்கொள்ள, திருப்பூரில், பின்னலாடை துறைக்கான ஆராய்ச்சி மையத்துடன் கூடிய ஆய்வுக்கூடம் (Laboratory) உருவாக்க வேண்டும்.

தனிவாரியம்:

தொழில் சார்ந்த பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு காணவும், வளர்ச்சி திட்டங்களை வகுக்கவும், பின்னலாடை துறைக்கு தனி வாரியம் (Separate Board) அமைக்க வேண்டும். பிற மாநிலங்கள் போன்று, தமிழகத்திலும், தொழிலாளர் கூடுதல் பணி நேரத்தை (Over time), காலாண்டுக்கு, 115 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும். தொழிலாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி (Labor Skills Development Training) திட்டம் உருவாக்க வேண்டும். தொழிலாளர், கல்லுாரி மாணவர்கள் வசதிக்காக, மெட்ரோ ரயில் திட்டத்தை, திருப்பூர் வரை நீட்டிக்கவேண்டும்.அதிக வர்த்தகர் உள்ளதால், திருப்பூரை தனி வணிக வரி மண்டலமாக அறிவிக்க வேண்டும். மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தொழில் நகரங்களை, மாநிலம் முழுக்க உருவாக்க வேண்டும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மூங்கில் வெட்டுவதற்கு முன் அனுமதி தேவையில்லை: நிதின் கட்கரி

தீபாவளி பதார்த்தங்கள் தயாரிக்க, விற்பனை செய்ய உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் பெறுவது எப்படி?

English Summary: Request to set up a separate board with subsidy for the Textile industry! Published on: 06 November 2020, 08:18 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.