1. செய்திகள்

பிளாஸ்டிக்கிற்கு எதிராக செயல்படும் புதிய வகை காளான் கண்டுபிடுப்பு

KJ Staff
KJ Staff
Plastic Eating Mushrooms

பிளாஸ்டிக் இன்று உலக சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதாகவும், உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாகவும்  இருந்து வருகிறது. மேலும் இந்த பிளாஸ்டிக் மக்குவதற்கு பல நுறு ஆண்டுகள் ஆகும் என்பதனால்  பல நாடுகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக ஒரு முறை மட்டுமே உபயோகிக்க கூடிய பிளாஸ்டிக் பொருளுக்கு அனைத்து இடங்களில் தடை செய்து வருகின்றனர்.

பெஸ்டலோடியோப்சிஸ் மைரோஸ்போரா என்பது ஒரு வகை காளான். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இது நிலம், நீர் என நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக்கை மக்க வைக்கும் தன்மை கொண்டது. இந்த காளான்கள் மண்ணில் இருக்கும் பிளாஸ்டிக்கை மண்ணோடு மண்ணாக மக்க வைத்து கரிம பொருளாக மாற்றும் சக்தி கொண்டவை.

பெஸ்டலோடியோப்சிஸ் மைரோஸ்போரா என்ற காளான் பிளாஸ்டிக் தயாரிக்க தேவையான பாலியுரிதேனை உணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால்  இவை மக்குவதற்கு ஒரு மாத கால அவகாசம்  ஆகும் என்கிறார்கள், இதை பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள். முதல் கட்ட ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக கூறினார்கள். வெகு விரைவில் இந்த வகை காளான்களை எங்கே, எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க பட்டு வருவதாக கூறினர்கள்.

Plastic-eating fungus

அமேசான் மழை காடுகளில் மட்டுமே வளரக்கூடிய இந்த வகை காளான்களை அமெரிக்கா பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக் சாப்பிட்டு வளரும்  காளான்களால் மனித உயிர்க்கு ஆபத்து எதுவும் உண்டாகாது என கூறி உள்ளனர். இது அக்சிஜன் இல்லாமலே வளர கூடியது. மேலும் இதன் வளர்ச்சியை கட்டிற்குள் வைக்க இயலும். மட்கிய பிளாஸ்டிக்கினை கொண்டு வேறு சில பொருட்களை தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

நிலத்தில் மட்டுமல்லாது நீரினையும் பிளாஸ்டிக் மாசு படுத்தி வருகிறது. கடல் வாழ் உயிரினங்கள் அழிவிற்கு பிளாஸ்டிக்  முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் கூறி  வருகிறார்கள். கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவை அழித்து கார்பன் டை ஆக்சைடாகவும், தண்ணீராகவும் மற்றும் புழுக்களை மாணவிகள் உருவாக்கி உள்ளனர். விரைவில் இவை குறித்து முழுமையான தகவல்கள், பயன்படுத்தும் விதம் போன்றவை வெளியாகும் என எதிர் பார்க்க படுகிறது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Scientists discovered Plastic-Eating Fungus: Here After Our Plastic Pollution Will be Solve

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.