1. செய்திகள்

பாஜக.வின் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட அனுமதி இல்லை

KJ Staff
KJ Staff

பாஜக. தனது கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுயிருந்தது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் மக்களவையின் சபாநாயகரான சுமித்ரா மகா ஜனுக்கும்  இந்த முறை போட்டியிட அனுமதி இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர்களின் வயதினை காரணம் காட்டி மறுக்கப்பட்டனவா என தெரியவில்லை.

முன்னாள் துணைப் பிரதமரான எல்.கே.அத்வானிக்கு பதிலாக, குஜராத்தின் காந்திநகரில் அமித்ஷாவை களம் இறக்க உள்ளார்கள். அதேபோன்று கான்பூரின் எம்பி.யான முரளி மனோகர் ஜோஷிக்கு பதிலாக, சத்யதேவ் பச்சோரி என்ற அமைச்சருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், தன்னை போட்டியிட வேண்டாம் என பாஜகவினர் வற்புறுத்தியதாகத் தெரிவித்தார். 

இவ்வரிசையில், மக்களவையின் தற்போதைய சபாநாயகரான சுமித்ரா மகாஜனுக்கும்  போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக தகல்வல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அவரிடம் பேசி,  போட்டியில் இருந்து விலகும்படி அம்மாநில பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.சுமித்ரா மகாஜனுக்கு பதிலாக அக்கட்சியின் முக்கிய தலைவரான கைலாஷ் விஜய்வர்கியாவிற்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவின் கோட்டையாக இருக்கும், இந்தூர் தொகுதியில் எட்டு  முறை எம்பி.யாக சுமித்ரா மகாஜன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியும் இம்முறை இந்தூர் தொகுதினை கைவசப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக பங்கஜ் சங்கவி மற்றும் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை   களம் இறக்க பரிசீலித்து வருகிறார்கள்.

English Summary: Senior BJP leaders are not allowed to contest

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.