1. செய்திகள்

வேளாண்மைப் பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை - ஆன்லைனில் துவங்கியது!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Admission for Agri Diploma

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பட்டயப்படிப்புகளுக்கான 2020-21ம் ஆண்டிற்கான மாணவர்சேர்க்கை இணையதளம் வாயிலாகத் துவங்கியது.

பட்டயப்படிப்புகள் (Diploma)

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் (TNAU) கீழ் இயங்கி வரும் 3 உறுப்புக் கல்வி நிலையங்கள் மற்றும் 10 இணைப்புக் கல்வி நிலையங்களில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகள் (Diploma) கற்பிக்கப்படுகின்றன. இந்தப்படிப்புகளில் உள்ள 860 இடங்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். நீ.குமார் இணையதள வாயிலாகத் துவக்கி வைத்தார்.

மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களை அறிந்து கொள்ள https://tnauonline.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் கையேடு உதவியாக இருக்கும். மாணவர்களின் வசதிக்காக பட்டயப்படிப்பிற்கான தகவல் கையேடு இந்த ஆண்டு முதல் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (https://tnauonline.in) உள்ள விண்ணப்பத்தினை இணையதள வாயிலாக (online) பூர்த்தி செய்து பின்பு பதிவிறக்கம் (Download) செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரியக் கட்டணம் (Demand Draft)மற்றும் சான்றிதழ்களை இணைத்து முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயமுத்தூர் - 641 003 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 0422-6611322, 0422-6611328, 0422-6611345, 0422-6611346 ஆகிய தொலைபேசி உதவி சேவை எண்களை, அனைத்து வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பதாரர்கள் அரசு கணினி சேவை மையங்களை தொடர்பு கொண்டும், இணையதள வாயிலாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

கடைசிநாள் (Last Date)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 16.10.2020. பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் விண்ணப்பக்கட்டணம் (கேட்பு வரைவோலை) தபால் மூலம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 21.10.2020 மாலை 5 மணி ஆகும்.

தரவரிசை (Ranking)

தரவரிசைப்பட்டியல் வரும் 29.10.2020 அன்று வெளியிடப்படும் என்று முனைவர் மா.கல்யாணசுந்தரம், முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்க்கை) தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

விதைகளை வாங்கவும் வந்துவிட்டது Online -APP- விவசாயிகளுக்கு புதிய வசதி

அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க 50% மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Student Admission for Agricultural Diploma Courses - Launched Online!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.