1. செய்திகள்

தமிழகம்: 8 மடங்காக அதிகரித்த மது விற்பனை!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Liquor sales increased 8 times

5 ஆண்டுகளுக்கு முன்பு 2 சதவீதமாக இருந்த பிரீமியம் வகை மது பாட்டில் விற்பனை தற்போது 16 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள் குறைக்கப்பட்ட போதிலும் மது விற்பனை குறையவில்லை மாறாக 8 மடங்கு விற்பனை அதிகரித்து உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 20% குறைக்கப்பட்டது. 2006 முதல் 2021 வரை தமிழகத்தில் 1,311 மதுக்கடைகள் குறைக்கப்பட்டன.

6,736 மதுக்கடைகள் செயலில் இருந்த நிலையில் அவை இப்போது 5,425 ஆக குறைந்துள்ளது. மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்ட போதிலும் இந்த காலங்களில் மது விற்பனை 8 மடங்கு அதிகரித்துள்ளது.

இதே காலங்களில் ரூ.4,195 கோடியாக இருந்த மது விற்பனை தற்போது ரூ.33,746 கோடியாக உயர்ந்துள்ளது. சராசரியாக 20 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த காலங்களில் 2 சதவீதம் முதல் 120 சதவீதம் வரை மது விற்பனை அதிகரித்துள்ளது என்று தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கசிந்துள்ளது.

டாஸ்மாக் மது விற்பனை 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. 2007-ல் உள்நாட்டில் தயாரிக்கும் வெளிநாடு மது வகைகள் 24 லட்சம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டது. (ஒரு பெட்டியில் 48 குவார்ட்டர் பாட்டில்கள் இருக்கும்) இது 2021-ல் 50 லட்சம் பெட்டியாக அதிகரித்துள்ளது.

மது மீதான ஆயத்தீர்வை மற்றும் வாட் வரி உயர்வும் இன்னொரு காரணமாகும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறினர். பிரீமியம் வகை மதுபானங்கள் தேவை அதிகரித்து இருப்பதும் மது விற்பனை அதிகரிப்பதற்கு காரணமாகும்.

15 ஆண்டுகளுக்கு முன்பு 2% ஆக இருந்த பிரீமியம் வகை மது விற்பனை தற்போது 16 % ஆக உயர்ந்துள்ளது. சாதாரண மது வகைகளை விட பிரீமியம்(வெளிநாட்டு) மது வகைகளின் விலை அதிகமாக இருப்பதால் விற்பனையின் அளவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:

இனி டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை இல்லை!அதிரடி உத்தரவு !

மது பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி: விரைவில் அறிவிப்பு!!

English Summary: Tamil Nadu: Liquor sales increased 8 times Published on: 20 August 2021, 12:19 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.