1. செய்திகள்

கத்திரி வெயில் ஆரம்பம்: அனல் காற்று வீச தொடங்கியது: பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை

KJ Staff
KJ Staff

தமிழகத்தில் இன்று முதல் கத்தரி வெயில் ஆரம்பமாக உள்ளது. இதன் தாக்கம் வரும் 29-ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. ஏற்கனவே வெயில் அதிகமாக இருந்து வந்த நிலையில் கத்திரி வெயிலும் இத்துடன் இணைத்து விட்டது.

ஃபனி புயல் கடந்த 25 ஆம் தேதி சென்னைக்கு அருகில் தொடங்கி பின் மேற்கு நோக்கி சென்றது. இந்த புயலானது காற்றிலுள்ள ஈரப்பதத்தை ஈர்த்து சென்றதினால் வெப்ப காற்று வீச தொடங்கியுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரினை  தொட்டது. அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் பதிவாகியுள்ளது

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பகலில் வெளியே  செல்வதை தவிர்க்குமாறு கூறுகின்றனர். குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்குமாறு வானிலை ஆராய்ச்சியாளர்  கூறுயுள்ளனர். 

 மொத்தம் 12  மாவட்டங்களில் வெயிலின் அலை வீசுவதால் பகல் நேரங்களில் வெளியே செல்வோர், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தேவையானவற்றை கையில் எடுத்துக்கொள்ளும் படி கேட்டு கொள்கிறார்கள். தண்ணீர் பாட்டில்கள் , குடை எப்பொழுதும் கைவசம் இருக்கும் படி பார்த்து கொள்ளவும். பழசாறு, இளநீர், நீர் மோர், நூங்கு, வெள்ளரி, தண்ணீர் பழம் போன்றவை உடல் சூட்டை தணிக்க வல்லது. எனவே மருத்துவர்கள் இதனை உட்கொள்ளும் படி பரிந்துரைக்கிறார்கள்.     

English Summary: Temperature Reach 100 Degree: Be Alert While Going Out

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.