1. செய்திகள்

TNPSC 2022: அலுவலர் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசித் தேதி!

Deiva Bindhiya
Deiva Bindhiya
TNPSC 2022: Child Protection Officer Employment! Last date to apply!

TNPSC recruitment 2022: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள, kgகுமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில்16 பணியிடங்கள் உள்ளன, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.04.2022க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (District Child Protection Officer).

மொத்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை: 16

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Sociology or Social Work or Psychology or Child Development or Criminology படிப்பு முடித்திருத்தல் வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆட்டோமொபைல் இன் ஜினியர் பணியிடங்களுக்கு 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது என்பது குறிப்பிடதக்கது.

சம்பளம் விவரம்: ரூ.56,100 – 2,05,700

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெற இருக்கின்றன. முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும் என்பது குறிப்பிடதக்கது. இதற்கான கால அளவு 3 மணி நேரமாகும்.

இரண்டாம் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வாகும். இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயமாகும். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது என்பது குறிப்பிடதக்கது. இது தகுதித் தேர்வு மட்டுமே, மேலும் இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.

இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் 25 வினாக்களும் இடம்பெறும். இதற்கான கால அளவும் 3 மணி நேரமாகும்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 19.06.2022

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150 ஆகும், இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வுக் கட்டணம்: ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு என்பது குறிப்பிடதக்கது.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள், அதே பதிவு மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2022 எனவே விரைவில் விண்ணப்பிக்கவும்.

மேலும் படிக்க:

Cucumber Farming: கோடையில் வெள்ளரி சாகுபடி செய்து லட்சங்களில் சம்பாதிக்கலாம்

PM-Kisan 11வது தவணைத் தொகை- அடுத்த வாரம் வருகிறது ரூ.2000!

English Summary: TNPSC 2022: Officer Recruitment! Last date to apply! Published on: 12 April 2022, 02:20 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.