1. செய்திகள்

கொள்முதல் செய்யப்படாத நெல்மணிகள் மழையில் முளைத்தது! கவலையில் விவசாயிகள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Padd Purchase

Credit : Daiy Thandhi

மதுரை மாவட்டத்தில், திருமங்கலம் அருகே கொள்முதல் மையத்தில் நெல்மணிகளை வாங்க தாமதம் செய்த காரணத்தால், அந்த நெல்கள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிலையம்

திருமங்கலம் அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் மையம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றியுள்ள சின்ன வாகைகுளம், பெரிய வாகைகுளம், அழகுசிறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் நெல் சாகுபடி (Paddy Cultivation) செய்துள்ளனர். இவர்கள் சாகுபடி செய்த நெல்மணிகளை வாகைக்குளம் கொள்முதல் மையத்தில் விற்பனை செய்வார்கள். வழக்கம்போல் மழைக்காலம் மற்றும் கோடை காலத்தில் நெல்கொள்முதல் மையம் திறக்கப்பட்டு, விவசாயிகளுக்காக செயல்பட்டு வரும்.

இந்த கொள்முதல் மையத்தில் கோடைகால விளைச்சல் நெல்லை விவசாயிகளிடமிருந்து 34 ஆயிரம் டன் எடுப்பதற்கான அனுமதி அளித்துள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் கடந்த ஒரு மாதம் வரை சுமார் 14 ஆயிரம் டன் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டன. இன்னும் 20 ஆயிரம் டன் நெல் மூடைகள் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு முன்பாகவே கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. கொள்முதல் மையத்திற்கு கொண்டு வந்த நெல்களை விவசாயிகள் திறந்த வெளியில் குவித்து வைத்துள்ளனர். மேலும் மூடைகளிம் நெல்களை போட்டு கட்டி வைத்துள்ளனர். இவைகள் சாதாரண தார்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்த நெல்மூட்டைகள் மற்றும் குவித்து வைக்ககப்பட்டு நெல்கள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கி விட்டன. இதனால் இந்த பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

முளைத்த நெல்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது, வாகைகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வரும் நெல் நேரடியாக விவசாயிகள் கொண்டு வருவதாகும். ஏப்ரல் 24-ந் தேதிக்கு பின்பு விளைந்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து வைத்துள்ளனர். அங்கு திறந்த வெளியில் நெல்களை கொட்டி குவித்து வைத்துள்ளனர்.

ஆனால் கடந்த 20 நாட்களாக நெல்களை கொள்முதல் (Purchase) செய்யாத நிலை உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் கொள்முதல் மையத்தில் திறந்த வெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்கள் நனைந்து முளைத்து வருகின்றன. மேலும் மூடைகளில் கட்டி வைக்கப்பட்டுள்ள நெல்களும் மழையில் நனைந்து முளைக்க தொடங்கி உள்ளன. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெல் விற்பனை செய்த தொகையும் இன்னும் கிடைக்கவில்லை. மேலும் பெருங்காமநல்லூரில் உள்ள கொள்முதல் மையத்தில் அதிக அளவில் நெல் கொள்முதல் நடக்கிறது என்றனர்.

விவசாயிகள் கோரிக்கை

இதுகுறித்து நெல் கொள்முதல் மைய அதிகாரிகள் கூறியதாவது, மழை காலத்திற்கான நெல் கொள்முதல் (Paddy Purchase) முடிந்துவிட்டது. அடுத்து கோடைகால நெல் வாங்க அரசு அனுமதி அளிக்கும். அப்போது தான் வாங்க முடியும் என கூறினர். எனவே இந்த விஷயத்தில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு விளைந்த நெல் மூடைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

முந்திரி சாகுபடியில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கலாம்! வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை!

English Summary: Unpurchased paddy germinated in the rain! Worried farmers!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.