1. செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுமா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

Credit : New 18

முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துவது குறித்து தமிழகம் மற்றும் கேரள மாநில நீர்வளத்துறை அதிகாரிகளிடம் மத்தியக் குழு கருத்துக் கேட்டுள்ளது.

கேரள அரசு தடை (Government of Kerala banned)

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள முல்லை பெரியாறு அணை மூலம் 14,707 ஏக்கரில் இரு போக சாகுபடி நடந்து வரு கிறது. ஆனால் 1979-ம் ஆண்டு 152 அடிக்கு அணையில் நீர் தேக்க கேரள அரசு தடை விதித்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு (Judgment of the Supreme Court)

பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின் 142 அடி வரை நீர் தேக்கலாம் என 26.4.2014-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பேபி அணையைப் பலப்படுத்தி 152 அடி வரை நீர் தேக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்ற பரிந்துரைப்படி மூவர் அடங்கிய மத்திய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

இக்குழு ஆண்டுதோறும் அணையில் ஆய்வு மேற்கொண்டு வழங்கும் ஆலோசனைப்படி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழு தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன், கேரள அரசு சார்பில் நீர்வள ஆதார அமைப்பின் செயலர் பிரணாப் ஜோதிநாத் உள்ளனர்.

ஷட்டர்களை இயக்கி சோதனை (Shutters drive test)

இந்நிலையில் அணையில் நேற்று ஆய்வு நடத்திய மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழு ஷட்டர்களை இயக்கிப் பார்த்தது.நேற்றைய ஆய்வில் மணிவாசன் பங்கேற்காத நிலையில் அக்குழு மெயின் அணை, பேபி அணை, நீர்க்கசிவு காலரி, ஷட்டர் பகுதிகளை பார்வையிட்டது.

கசிவுநீர் சோதனைக்காக கேன்களில் சேகரிக்கப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா மின்சாரம் வழங்கிய நிலையில் 13 ஷட்டர்களில் 3, 4வது ஷட்டர்கள் இயக்கி பார்க்கப்பட்டது. ஆய்வுக்குப்பின் நேற்று மாலை தேக்கடியில் தமிழக, கேரள அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மரங்கள் வெட்டப்படுமா? (Will the trees be cut down?)

இதுகுறித்து மத்திய கண்காணிப்பு குழு தலைவர் குல்சன்ராஜ் கூறுகையில், ''பெரியாறு அணை பலமாக உள்ளது. அணையையொட்டிய பேபி அணையை பலப்படுத்த அங்குள்ள மரங்களை வெட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கருத்துக் கேட்பு (Feedback)

அணையில் 142 அடி தேக்க காலநிலை(ரூல்கர்வ்) குறித்து இரு மாநில அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. எனினும் மத்திய நீர்வள கமிஷனின் ஆலோசனைக்கு பின் முடிவு எடுக்கப்படும். அணைக்கு மின்சார இணைப்பு கொடுத்தது திருப்திகரமாக உள்ளது'' என்றார்.

காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணி, தலைமை பொறியாளர் செல்வராஜ், மதுரை கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், செயற்பொறியாளர் ஷாம் இர்வின், கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் பினு பேபி, துணைக்குழு தலைவர் சரவணகுமார் மற்றும் தமிழக, கேரள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க...

ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!

ரேஷன் கடைகளில் மத்திய குழு விரைவில் ஆய்வு!

PM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்!

English Summary: Will the water level of Mullaiperiyaru Dam be raised?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.