1. மற்றவை

கொரோனாவுக்கு சிங்கம் பலி! சென்னை வண்டலூர் பூங்காவில் சோகம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

கொரோனா நோய்த்தொற்றுக்கு மக்கள் அவதிப்படும் நிலையில், விலங்குகளும் அதிலிருந்து தப்பவில்லை. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோன தொற்று பாதிக்கப்பட்ட ஆண் சிங்கம் உயிரிழந்தது. மேலும் இரண்டு பெண் சிங்கங்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளன.

கொரோன நோய் தொற்று

சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் மனிதர்களிடையே காணப்படுகிறது. நோய் பரவல் விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. முதலில் அமெரிக்கா நியூயார்க் சிட்டியில் உள்ள டிரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் புலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது.

சிங்கங்களுக்கு கொரோனா

இதனையடுத்து கடந்த மே மாதம் முதல் முறையாக ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஏப்ரல் மாதம் 20-ந்தேதி முதல் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.

சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை

பின்னர், கடந்த மே 26-ந்தேதி வண்டலூரில் பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கு தொடர் இருமல் இருப்பது ஊழியர்கள் மூலம் தெரியவந்தது. அன்றைய தினமே உடல் சோர்வுடன் காணப்பட்ட சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஆண் சிங்கம் பலி

இந்த பரிசோதனை முடிவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 வயது உடைய நீலா என்ற பெண் சிங்கம் இறந்துவிட்டது. மேலும் 2 பெண் சிங்கங்களின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்து வருகிறது. தற்போது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் உயிரிழந்துள்ளது.

மேலும் படிக்க....

மீன்பிடி தடை காலம் நிறைவு: கடலுக்கு சென்ற மீனவர்கள்!!

மக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்! முதல்வர் எச்சரிக்கை!

English Summary: Another lion died on corona in Vandaloor Zoo Published on: 17 June 2021, 08:12 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.