1. மற்றவை

மொபைல் கேமிற்கு எதிர்ப்பு- 200 பவுன், தங்கத்தை திருடியச் சிறுவன்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Ban on playing games on mobile-boy who stole millions of rupees, 200, gold from home!

செல்போன் என்பது தற்போது நம் ஆடை போன்று மாறிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே செல்போன் அத்யாவசியத் தேவையாகும்.

செல்போன் விளையாட்டு (Cellphone game)

படிப்பதில் தொடங்கி வேலை செய்வது வரை அனைத்துமே வீட்டில், அதுவும் ஆன்லைனில் நடைபெறுகிறது. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிற்கும் நன்மை, தீமை என இரண்டுமே இருக்கும். அந்த வரிசையில் செல்போனில் எல்லாவற்றையுமே செய்ய முடிகிறது. அதே நேரத்தில் கேம் விளையாட்டு, இளசுகளை அடிமையாக்காமல் இல்லை.

கண்டித்தப் பெற்றோர் (Condemned parents)

மொபைலில் கேம் போட்டுக்கொடுத்தால்தான் சாப்பாடு சாப்பிடுவேன் என அடம்பிடிக்கும் 2 வயது சிறுவன் முதல் அரியர்வைத்திருக்கும் காலேஜ் மாணவர்கள் வரை, அனைவருக்கும் இந்த விளையாட்டு அத்துப்படி. அந்த வகையில் அடிமையாக மாறும் இவர்கள், விளையாடியது போதும் என கண்டிக்கும் பெற்றோரை எதிர்த்து எதையும் செய்யத் துணிந்துவிடுகிறார்கள். அப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது.

24 மணி நேரத்தில் (In 24 hours)

சென்னையில் ஃப்ரீ பையர் கேம் விளையாட பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துச் சென்றச் சிறுவனை, 24 மணி நேரத்திற்குள் போலீசார் பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மொட்டை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட் குமார். சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது 15 வயது இரண்டாவது மகன் வீட்டில் எந்நேரமும் ஃப்ரீ பையர் கேம் விளையாடி வந்ததாகவும் அதனால் வீட்டில் உள்ள அனைவரும் சிறுவனை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

213 சவரன் தங்கம் (213 Shaving Gold)

இதனால் ஆத்திரமடைந்த செல்வம் 17ஆம் தேதி இரவு எட்டரை மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பீரோவில் இருந்த முப்பத்தி மூன்று லட்சம் பணம் 213 சவரன் தங்க நகைகளை எடுத்துச் சென்றதும் தெரிய வந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பிரீ பையர் கேம் (Free Fire Game)

தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், 24 மணி நேரத்திற்குள் சிறுவனை மீட்டு பணம் மற்றும் நகையை கைப்பற்றி பெற்றோரிடம் கொடுத்து சிறுவனை கண்டித்து வீட்டிற்கு அனுப்பினர். விசாரணையில் பிரீ பையர் கேம் விளையாட அனுமதி மறுத்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துச் சென்றதும், நகையை தாம்பரத்தில் உள்ள ஒரு கடையில் அடகு வைக்க முயற்சித்து பணத்திற்காக காத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், நேபாளம் செல்வதற்காக விமான டிக்கெட் புக் செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிக்கியது எப்படி? (How to get stuck?)

அதுமட்டுமல்லாமல், புதிய செல்போன் வாங்கி மீண்டும் தனது நண்பர்களை ஃப்ரீ பையர் கேம் விளையாட அழைத்த போது அதனை டிராக் செய்து போலீசார் சிறுவனை பிடித்தனர்.

மேலும் படிக்க...

இவர்கள் வெளியே வரத் தடை- அதிரடி சட்டம்!

ஒரு ரூபாய்க்குக்கூடத் தங்கம் வாங்கலாம்- விபரம் உள்ளே!

English Summary: Ban on playing games on mobile-boy who stole millions of rupees, 200, gold from home! Published on: 21 November 2021, 11:44 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.