
நம் நாட்டில் கால்நடை வளர்ப்பு என்பது நெடுங்காலமாக இருந்து வருகிறது. விவசாயிகளின் உபதொழிலாகவும், உபரி வருமானத்திற்கு வழிவகுக்கும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் இன்று தவிர்க்க முடியாத மற்றும் அதிகன் லாபம் தரும் தொழிலாக மாறி இருப்பது பன்றி வளர்ப்பு ஆகும். இன்று கால்நடை வளர்ப்பு என்பது பெரும்பாலும் பண்ணைகள் அமைத்து வியாபார நோக்கத்திற்காக வளர்க்க ஆரம்பித்து விட்டனர். வியாபாரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகளின் பட்டியலில் இன்று முயல், பன்றி ஆகியன சேர்க்கப்பட்டு விட்டன.
பெருகிவரும் மக்கள் தொகையின் உணவு மற்றும் புரத சத்தின் தேவையை பூர்த்தி செய்ய ஒருங்கிணைந்த கால்நடை வளா்ப்பு அவசியமாகிறது. பன்றி வளா்ப்பினால் புரத தேவையையும், வருமானத்தையும் ஒருங்கே பெற முடியும். தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் சார்பில் இலவச ஒரு நாள் பன்றி வளர்ப்பு பயிற்சி அளிக்கப் பட உள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள், சுயத்தொழில் தொடங்க நினைப்பவர்களை என அனைவ்ரும் கலந்து கொள்ளலாம்.
பயிற்சியின் முக்கியம்சமாக பன்றிகளை தேர்ந்தெடுத்தல், மேலாண்மை முறைகள், இறைச்சிக்கான பன்றி பண்ணை, இனப்பெருக்கத்துக்கான பன்றி பண்ணை, தீவன மேலாண்மை யுக்திகள், நோய் அறிகுறி மற்றும் தீர்க்கும் வழிகள், கர்ப்பக்காலதில் கவனிக்கும் முறைகள், சந்தைப்படுத்தும் முறைகள் குறித்த விரிவான விளக்கங்கள் கொடுக்கப் பட உள்ளன.
பயிற்சி விவரம்
நடைபெறும் நாட்கள்: 19.03.2020 வியாழக்கிழமை
நடைபெறும் நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
நடைபெறும் இடம்: உழவர் பயிற்சி நிலையம், ஏனாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்
தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 044-27264019
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை கொண்டு வந்து ஆதார் எண்ணை மையத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.