கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச பயிற்சி

This Workshop will be organized from 12 Mar, 2020 09:03 to 13 Mar, 2020 05:00
Training for cow growers

இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாமினை கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது. பங்கேற்க விருப்பமும் விவசாயிகள், கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், ஈடுபட நினைப்பவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனைகளையும், துறை சார்ந்த வல்லுனர்களின் அறிவுரைகளையும் பெறலாம்.

பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு கறவை மாடு வளர்ப்பு பற்றிய அனைத்து தகவல்கள் அளிக்கப்பட உள்ளன. தரமான கறவை மாடுகளைத் தோ்ந்தெடுத்தல், பருவத்திற்கேற்ற பராமரிப்பு,    சினை கால பராமரிப்பு, கன்றுப் பராமரிப்பு, கறவை இனங்களுக்கு தோன்றும் நோய் மற்றும் தடுக்கும் முறைகள், ஒட்டுண்ணி நிர்வாகம், தீவனப்பயிர் சாகுபடி, தீவன மரங்கள் வளர்ப்பு, அடர், கலப்பு மற்றும் பசுந் தீவன மேலாண்மை, போன்ற அனைத்து விவரங்களும் பயிற்றுவிக்க பட உள்ளன. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ,முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது பயிற்சி தொடங்கும் மார்ச் 12ம் தேதி காலை நேரில் வந்து தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சி விவரம்:

நடை பெறும் இடம்: கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,  திருச்சி

நடை பெறும் நாள்: மார்ச் 12,13

தொடங்கும் நேரம்: காலை 9 மணி

மேலும் விவரங்களுக்கு

பி.என். ரிச்சர்டு ஜெகதீசன்,
மையத் தலைவர் மற்றும் பேராசிரியர்,
கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
திருச்சி
தொலைபேசி: 0431-2331715


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.