1. கால்நடை

கால்நடைகளில் மலட்டுத்தன்மை- நீக்கும் வழிமுறைகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Infertility in cattle- Removal methods!

கால்நடை விவசாயிகள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கால்நடைகளில் ஏற்படும் மலட்டுத்தன்மையை நீக்க முடியும்.

ஆதரவுத் தொழில் (Support industry)

விவசாயம் நம்முடைய பாரம்பரியத் தொழிலாகக் கருதப்பட்டாலும், பயிர்கள் கைவிடும் நேரத்தில், விவசாயியைத் தூக்கிவிடுவது கால்நடை வளர்ப்புதான்.
அதனால்தான் இதனை விவசாயத்தில் ஆதரவுத் தொழில் என்று கூறுகிறார்கள்.

பிரதானத் தொழில் (The main industry)

திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் கால்நடை வளர்த்தல் பிரதான தொழிலாகும். ஆனால் சினைப்பிடிக்காதக் கறவை மாட்டைப் பராமரிப்பது என்பது, பால் பண்ணை விவசாயிகளுக்கு பொருளாதார சுமையாக மாறி வருகிறது.

பல காரணிகள் (Many factors)

ஊட்டச்சத்துக் குறைபாடு, தொற்றுநோய், பிறவிக்கோளாறு போன்ற காரணங்களால் சிலக் கறவை மாடுகளில் சினை பிடிக்காமல் மலட்டுத்தன்மை காணப்படுகிறது.

இதனை விவசாயிகள் கவனிக்கத் தவறும்பட்சத்திலோ, கருவுறும் தன்மை மற்றும் கன்று ஈனும் விகிதத்தினை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளும் போதோ, விவசாயிகள் பொருளாதார இழப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

அதேநேரத்தில், ஒரு சில முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை கூடுதல் கவனத்துடன் மேற்கொள்வதன் வாயிலாக மலட்டுத் தன்மையை போக்க முடியும்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட கால்நடைத்துறையினர் கூறியதாவது:-

  • பசு மற்றும் எருமை மாடுகளில் சினைப்பருவச் சுழற்சியானது, 18 முதல் 21 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுகிறது.

  • சினைப்பருவ சுழற்சி காலத்தில் விவசாயிகள் மாட்டினை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

  • சினை ஊசி போடுதல் அல்லது காளையுடன் சேர்க்க வேண்டிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.

  • அதேநேரத்தில் கால்நடை மருத்துவர் வாயிலாக பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

  • 6 மாதத்துக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

  • குறிப்பாக புரதம், கனிமம் மற்றும் விட்டமின்கள் கலந்த சரிவிகித தீவனத்தை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க...

மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்க ஆடு வளர்ப்பு! 90% வரை அரசாங்கம் மானியம்

மீன் வளர்ப்பு மூலம் அதிகம் லாபம் பெற 5 சிறந்த டிப்ஸ்!

English Summary: Infertility in cattle- Removal methods!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.