1. Blogs

உயிர்ப் பறிக்கும் சயனைடு தான், உயிர்கள் உருவாக காரணம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan

Cyanide is deadly

புதிய ஆராய்ச்சியில் , கொடிய சயனைடு கலவை, உண்மையில், பூமியில் உயிர்கள் உருவாக உதவியது என்று கண்டறியப்பட்டு உள்ளது. விஞ்ஞானிகள் சயனைடைப் பயன்படுத்தி ஒரு இரசாயன எதிர்வினையை உருவாக்கியுள்ளனர். சயனைடு நான்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கரிம உயிர்களை உருவாக்க உதவியது என கண்டறிந்து உள்ளனர்.

சயனைடு (Cyanide)

சயனைடு என்பது கார்பன் மற்றும் நைட்ரோஜன் அணுக்களால் உருவானது. இதன் அறிவியல் பெயர் சிஎச் (CH). இதனை உட்கொள்ளும் நபர் முதலில் தலைவலி, எரிச்சல், இதய துடிப்பின் வேகம் அதிகரிப்பு, வாந்தி முதலியவற்றை சந்திக்க நேரிடும். பின்னர் குறைந்த இரத்த அழுத்தம், மெதுவான இதய துடிப்பு, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும். இதனை உட்கொண்ட நபரை காப்பற்ற இயலாது. ஒருவேளை காப்பாற்றினாலும் வாழ்நாள் முழுவதும் நரம்பு சம்பந்தபட்ட நோய்களால் அவதிப்பட நேரிடும். இதற்கு காரணம் அதில் கலந்துள்ள ஹைட்ரஜன் சயனைடு கேஸ் மற்றும் ஹைட்ரஜன் உப்புகள்.

அத்தியாவசிய கலவை (Essential composition)

இந்த ஆபத்தான வாயுக்கள் சயனைடு குப்பியில் மட்டுமில்லால் எரிகின்ற வீடு, மெட்டல் புகைகளில் இருந்தும் வருகின்றது. சயனைடு என்பது வடிவங்களில் இருக்கக்கூடிய ஒரு கொடிய இரசாயனம். ரசாயனம் உயிரை போக்க கூடியதாக இருந்தாலும், சயனைடு உயிருக்கு தேவையான மூலக்கூறுகளை உருவாக்குவதற்கு ஒரு அத்தியாவசிய கலவை என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

மேலும், வேற்றுகிரக கிரகங்களில் அதற்கான அறிகுறிகளைத் தேடுவது, பிரபஞ்சத்தில் வேறு இடங்களில் உள்ள உயிர்களைக் கண்டறிய உதவும் என்று ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். நைட்ரஜன் அணுவுடன் பிணைக்கப்பட்ட கார்பன் அணுவைக் கொண்ட கலவை, கார்பன் டை ஆக்சைடில் இருந்து கார்பன் அடிப்படையிலான சேர்மங்களை உருவாக்கும் பூமியில் சில முதல் வளர்சிதை மாற்ற எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்று குழு கண்டுபிடித்தது.

வளர்சிதை மாற்ற எதிர்வினைகள் என்பது உணவில் இருந்து ஆற்றலை உருவாக்கும் எதிர்வினைகள் மற்றும் உயிரைத் தக்கவைக்க அவசியம். இதுகுறித்து கூறிய ஆராய்ச்சியாளர்கள் 'சயனைடு பூமியில் உயிர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம், மேலும் வேற்று கிரகவாசிகளை கண்டறிய நமக்கு உதவலாம்' என்று கூறி உள்ளனர்.

ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியல் இணைப் பேராசிரியரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான டாக்டர் ராமநாராயணன் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- பூமியின் ஆரம்பத்திலோ அல்லது பிற கிரகங்களிலோ - நாம் உயிர் வாழ்வின் அறிகுறிகளைத் தேடும்போது, நாம் அறிந்த உயிர் வேதியியலின் அடிப்படையில் தேடுகிறோம். இதே வளர்சிதை மாற்ற எதிர்வினைகள் சயனைடால் நிகழ்ந்து இருக்கலாம் என்பது வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது என கூறினார்.

மேலும் படிக்க

வாட்ஸ்அப் இல் ஹார்ட் விட்டா ஜெயில் தண்டனை உறுதி!

தமிழ் நூல் எழுதிய சீன நாட்டைச் சேர்ந்த பெண்!

English Summary: Cyanide is deadly, causing life to form: scientists' discovery!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.