1. Blogs

கனரா வங்கி சார்பில் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
Goat Farming Workshop held at Erode

ஈரோடு கனரா வங்கி சார்பில் இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. மார்ச் 2 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதலின்படி,  கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட உள்ளது.

ஈரோடு கரூர் பைபாஸ் ரோடு கொல்லம்பாளையம் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில்  ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப் பட உள்ளது. இப்பயிற்சி கலந்து கொள்ள விரும்புவர்கள், குறைந்தபட்ச தகுதியாக தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பின்றி இதில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சுயஉதவிக்குழுக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சி காலை 09:30 முதல் மாலை 05:30 வரை நடைபெறுகிறது. கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவும், பயிற்சியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 0424-2400338  என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது பயிற்சி நிலையத்தை கொள்ளலாம் என கனரா வங்கி முதுநிலை மேலாளர் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

English Summary: Free Goat workshop Under Rural Entrepreneurship Development Programme

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.