1. Blogs

நல்ல சுவையான கிறிஸ்துமஸ் கேக்..! வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் வாங்க..!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

கிறிஸ்துமஸ் பண்டிகை வரப்போகுது, எல்லாரும் கேக் சாப்பிடி ரெடியா இருக்கீங்களா! இந்த கொரோனா காலத்துல நிறைய பேக்கரி கடைகள் வேற மூடியிருக்கு எப்படி கேக் வாங்குறதுன்னு கவலையா இருக்கீங்களா? சூப்பர் சுவையான கேக் எப்படி செய்றதுன்னு நாங்க உங்களுக்கு சொல்லித்தற்றோம்.. ஈஸியா வீட்டுலயே செஞ்சு சாப்பிடுங்க...!

கீழ்காணும் எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் போதும்.. நல்ல சுவையான கிறிஸ்துமஸ் கேக் ரெடி...!

தேவையான பொருட்கள் 

  • ஆரஞ்சு ஜூஸ் ஒரு கப்

  • எலுமிச்சை ஜூஸ் ஒரு கப்

  • வெண்ணெய் 250 கிராம்

  • பிரவுன் சீனி - 200 கிராம்

  • கேக் மாவு 175 கிராம்

  • பாதாம் - 100 கிராம்

  • பேக்கிங் பவுடர் - அரை ஸ்பூன்

  • லவங்கப்பட்டை - ஒரு ஸ்பூன்

  • கிராம்பு - கால் ஸ்பூன்

  • வறுத்த பாதாம் - 100 கிராம்

  • முட்டை (வெள்ளை கரு மட்டும்) - 4

  • வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்

இந்த பொருட்கள் எல்லாம் ரெடியா எடுத்து வச்சிக்கோங்க... இப்ப ஒவ்வொரு ஸ்டெப்ப கடைபிடிச்சுட்டே வாங்க..

Step 1

1 கிலோ கலவையான உலர்ந்த பழங்களை, ஆரஞ்சு சாறு மற்றும் எலுமிச்சை சாறுடன் 150 மில்லி பிராந்தி, 250 கிராம் வெண்ணெய் மற்றும் 200 கிராம் சர்க்கரை ஆகியவற்றை ஒரு பெரிய கடாயில் கலந்து அடுப்பில் வைக்கவும்.

Step 2

கொதிக்கும் நிலைக்கு வந்தவுடன், பின்னர் வெப்பத்தை குறைத்து ஐந்து நிமிடங்கள் கிளற வேண்டும். பழ கலவையை ஒரு பெரிய கிண்ணத்தில் வடித்து 30 நிமிடங்கள் குளிர்விக்க வேண்டும்.

STEP 3

மைக்ரோவேவ் ஓவனை 130-150 டிகிரி வெப்பநிலையில் வைத்து கேக் டின் மேல் பேக்கிங் பவுடனை தடவ வேண்டும். சுமார் 175 கிராம் கேக் மாவு, 100 கிராம் பாதாம், ½ தேக்கரண்டி பேக்கிங் பவுடர், 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை, ¼ தேக்கரண்டி கிராம்பு, 100 கிராம் வறுத்த பாதாம், 4 பெரிய முட்டையின் வெள்ளை கரு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் கலந்து, அதனுடன் வெண்ணிலா எசன்ணையும் சேர்த்து ஓவனில் வைக்க வேண்டும்.

STEP 4

ஓவனிலிருந்து கேக்கை எடுத்து பின்னர் முழுமையாக குளிர்விக்க விடுங்கள்.

STEP 5

கேக்கின் மேல், பழம் மற்றும் பால் கீரீம்களை வைத்து அலங்கரியுங்கள். சுவையான கேக் ரெடி!!

உலகின் தனித்துவமான அன்பின் திறவுகோலாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உங்கள் அனைவருக்கும் கிருஷி ஜாக்ரன் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள்!!

English Summary: How to prepare sweet and delicious xmas cake at home for this Christmas- easy tips for you

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.