1. Blogs

இந்திய தபால் துறையின் பாரத் இ-மார்ட் திட்டம்: இனி வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்!

R. Balakrishnan
R. Balakrishnan

India Post Bharat e-Mart

அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) மற்றும் டிரிப்டா டெக்னாலஜிஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய அஞ்சல் துறை நேற்று மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், 'பாரத் இ-மார்ட்' என்ற போர்ட்டலை செயல்படுத்த உதவுகிறது. இது வர்த்தகர்களிடம் இருந்து சரக்குகளை எடுத்துச் சென்று, நாடு முழுவதும் மக்களின் வீட்டிலேயே டெலிவரி செய்வதை உறுதி செய்யும். இது சிஏஐடி உடன் தொடர்புடைய எட்டு கோடி வர்த்தகர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஞ்சல் துறை திட்டங்கள்

செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் அரசின் சிறந்த செயல்திட்டங்களில் ஒன்று ஆகும். பெண்களின் வைப்புத் தொகைக்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும் மகிளா சம்மன் பச்சத் பத்ரா மிகவும் பிரபலமான திட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் போது அஞ்சல் துறை சிறப்பான சேவை வழங்கியது.

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் மாற்றியமைக்கக்கூடிய கொள்கைகளை உருவாக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி, தபால் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். இன்றைய நிகழ்வு உட்பட தபால் துறையின் ஒவ்வொரு கொள்கையும், செயலும் மேற்கூறிய நோக்கத்திலேயே செயல்படுகிறது என்று மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் கூறினார்.

பாரத் இ-மார்ட் (Bharat e-Mart)

சிஏஐடி மற்றும் பாரத் இ-மார்ட் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாட்டில் உள்ள சிறு வணிகர்களுக்குத் தேவையான போக்குவரத்து ஆதரவை வழங்குவதோடு, அவர்களின் வணிகங்களையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்றும் மத்திய இணையமைச்சர் தேவுசின் சவுகான் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க

இன்சூரன்ஸ் பாலிசி விதிகளில் மாற்றம்: இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்!

PF அதிக பென்சன்: பயனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகம்!

English Summary: India Post's Bharat E-Mart Project: Home Delivery Easy Now!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.