1. Blogs

ஓய்வூதியம் பெறுவோர் குறைகளை தீர்க்க பென்சன் அதாலத் என்ற குறைதீர்க்கும் முகாம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Pension

Credit : Daily Thandhi

தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை எடுக்க விரும்புபவர்களுக்கான குறைதீர்க்கும் முகாம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதனைப் பயன்படுத்தி தங்களின் குறைகளை தெரிவித்தால் உடனே தீர்க்கப்படும்.

குறைதீர்க்கும் முகாம்

தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை எடுக்க விரும்புபவர்களுக்காக, குறைதீர்க்கும் முகாமை வருகிற 20-ந்தேதி மாலை 3.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடத்த உள்ளது.

பென்சன் அதாலத்

சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஓய்வூதியம் (Pension) பெறுவதற்கான ஆணையை பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை [email protected] என்ற இ-மெயில் முகவரியில் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அனுப்புபவர்கள் 'பென்சன் அதாலத்' என்று குறிப்பிட்டு, அதில் தங்களுடைய பெயர், வருங்கால வைப்பு நிதி கணக்கு எண், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடவேண்டும்.

இணையவழியில் நடக்கும் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்துகொள்வதற்கான ‘லிங்க்' அதாவது இணைப்பு, ஓய்வூதியதாரர்கள் கொடுத்த இணையதள முகவரிக்கு (Website Link) அல்லது தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும். மேற்கண்ட தகவல் மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-1 (சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலம்) ரிதுராஜ் மேதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

1500 ஆக்சிஜன் ஆலைகள் விரைவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் அறிவுறுத்தல்!

கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்க மாநிலங்களுக்கு உத்தரவு!

English Summary: Pension Adalat Redressal Camp for Retirees!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.