1. Blogs

PF உயரும்: ஆனா டேக் ஹோம் சம்பளம் குறையும்: அமலுக்கு வரும் புதிய விதி!

R. Balakrishnan
R. Balakrishnan

EPFO

இன்று முதல் முதல் புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், வேலை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.
புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்புகள், அலுவலக வேலை நேரம் மற்றும் டேக் ஹோம் சம்பளத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். மத்திய அரசு நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, அதன் கீழ் ஒரு பணியாளரின் சம்பளம், அவரது பிஎஃப் பங்களிப்புகள் மற்றும் வேலை நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். 

இந்தச் சட்டங்களை விரைவில் செயல்படுத்த அரசாங்கம் விரும்புகிறது, மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், அடுத்த மாதம் முதல் அவை நடைமுறைக்கு வரும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

புதிய ஊதியக் குறியீடு (New payroll code)

அரசாங்கம் 29 தொழிலாளர் சட்டங்களை இணைத்து 4 ஊதியக் குறியீடுகளை தயாரித்துள்ளது. அதாவது ஊதிய குறியீடு, தொழில்துறை உறவுகள் குறியீடு, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சமூக பாதுகாப்பு குறியீடு ஆகியவை ஆகும்.. கடந்த 2019-ம் ஆண்டில் தொழில்துறை உறவுகள், வேலையின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய மூன்று தொழிலாளர் குறியீடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த புதிய ஊதிய குறியீட்டின் படி, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் நிறுவனத்தின் செலவில் (CTC) 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது. தற்போது, ​​பல நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைத்து, அதிக அலவன்ஸ்களை வழங்குவதால், நிறுவனத்தின் சுமை குறைகிறது. மேலும் புதிய ஊதியக் குறியீட்டின் படி, ஒரு ஊழியர் 15 முதல் 30 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்தாலே, அதை கணக்கிட்டு கூடுதல் ஊதியம் பெறலாம் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட உள்ளது.. தற்போதைய விதியின்படி, 30 நிமிடங்களுக்கும் குறைவாக வேலை செய்தால், அது கூடுதல் நேரத்திற்கு தகுதியானதாக கருதப்படாது.

ஊதியக் குறியீடு சட்டம், அமல்படுத்தப்பட்டவுடன், ஊழியர்களின் சம்பள அமைப்பு முற்றிலும் மாறும். ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் பிஎஃப் அதிகரிக்கும் என்பதால் ‘டேக் ஹோம் சம்பளம்’ குறையும். பிஎஃப் உடன், கிராஜுவிட்டிக்கான பங்களிப்பும் அதிகரிக்கும். இதனால் ஊழியர்களின் டேக் ஹோம் சம்பளம் குறையக்கூடும்..

மேலும் புதிய ஊதியக் குறியீட்டின்படி ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு (Earned Leave) எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு துறைகள் இப்போது 1 வருடத்தில் 30 விடுமுறைகளை அனுமதிக்கின்றன, பாதுகாப்பு ஊழியர்களுக்கு ஒரு வருடத்தில் 60 விடுமுறைகள்.

ஊழியர்கள் 300 விடுமுறைகள் வரை பணமாகப் பெறலாம், இருப்பினும் புதிய குறியீட்டில் விடுமுறை நாட்களை 450 ஆக அதிகரிக்க தொழிலாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. எனினும் ஊழியர்கள் 20 வருட சேவைக்குப் பிறகுதான் இந்த விடுமுறைகளை பணமாக எடுத்துக்கொள்ள முடியும்.

வேலை நேரம் (Work timings)

இதே போல் புதிய ஊதிய குறியீடு, ஊழியர்களின் வேலை நேரத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. அதாவது ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை முறைக்கு அனுமதி வழங்கப்படலாம், ஆனால் அவர்கள் அந்த நான்கு நாட்களில் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். வாரந்தோறும் 48மணி நேர வேலை அவசியம் என்று தொழிலாளர் அமைச்சகம் தெளிவாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, புதிய ஊதியக் குறியீடு ஏப்ரல் 1, 2021 முதல் அமல்படுத்தப்பட இருந்தது.. பின்னர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஜூலை 1, 2022 முதல் ஊழியர்களுக்கான புதிய ஊதியக் குறியீட்டை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 23 மாநிலங்களில் இதுவரை, 23 மாநிலங்கள் இந்தக் குறியீடுகளின் கீழ் விதிகளை உருவாக்கியுள்ளன, அவை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும் படிக்க

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தொடர்பான விதிமுறைகளில் மாற்றம்!

பென்சனர்கள் கவனத்திற்கு: நிதித்துறையின் சூப்பர் அறிவிப்பு!

English Summary: PF Rise: Take Home Salary reduced: New Rule Effective!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.