1. Blogs

மாதம் ரூ.5,000 முதலீடு - சில ஆண்டுகளில் லட்சாதிபதி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 5,000 investment per month - millionaire in a few years!

இங்கு லட்சாதிபதியாக யாருக்குதான் ஆசை இல்லை. அதற்கு என்ன வழி என்பதுதான் பலரது யோசனை. அப்படி யோசிப்பவராக நீங்கள்? அப்படியானால் இந்தத் தகவல் உங்களுக்குத்தான்.

நிதி ஆலோசகர்கள் பலராலும் பரிந்துரைக்கப்படும் முதலீட்டு திட்டமாக மியூட்சுவல் பண்ட் திட்டங்கள் உள்ளன. நீண்ட கால நோக்கில் இவை தரும் கணிசமான லாபத்தைப்போல, மற்ற சேமிப்பு திட்டங்களால் தருவதில்லை. லார்ஜ் கேப் மியூட்சுவல் பண்ட்களில் 10 ஆண்டுகள் முதலீட்டை அமைத்துக்கொண்டால் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

மாதாந்திர முதலீடு

எஸ்.ஐ.பி., எனும் மாதாந்திர முதலீடு திட்டம் தற்போது பிரபலமடைந்து வருகிறது. மொத்தமாக மியூட்சுவல் பண்டுகளில் பணத்தை போடும் போது அவை சரிவடைய வாய்ப்புகள் அதிகம். அதுவே மியூட்சுவல் ஏறினாலும், இறங்கினாலும் தொடர்ந்து சிஸ்டமேட்டிக்காக முதலீடு செய்யும் போது நாம் சராசரி விலையில் யூனிட்களை வாங்கியிருப்போம்.

ரிஸ்க் கிடையாது

அவற்றின் மூலம் ரிஸ்க்கானது பரவலாக்கப்பட்டு இழப்பு குறையும். இதுவே 10 ஆண்டுகள் வரை தொடரும் போது ரிஸ்க் என்பதே இருக்காது.மியூட்சுவல் பண்ட்களில் ஏ.யூ.எம்., என ஒன்றை கூறுவார்கள். ஒரு பண்ட் நிறுவனம் கையாளும் மொத்த பணத்தின் மதிப்பே இந்த ஏ.யூ.எம். இதனை அசெட் அண்டர் மேனேஜ்மென்ட் என்பர்.

ரூ.10 லட்சம்

இந்நிலையில் லார்ஜ்கேப் மியூட்சுவல் பண்ட்களில் நாம் மாதம் ரூ.5 ஆயிரம் என அடுத்த 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால், நாம் ரூ.6 லட்சம் செலுத்தியிருப்போம். அது குறைந்தபட்சம் 11 சதவீத ரிட்டர்ன் தந்தாலும் நமக்கு முடிவில் ரூ.10 லட்சம் கிடைக்கும்.

லட்சாதிபதி

ரூ.30 ஆயிரம் சம்பளம் பெறும் ஒருவர் சம்பளத்தில் 20 சதவீதத்தை இன்றிலிருந்து முதலீடு செய்தாலும், அடுத்த பத்து ஆண்டுகளில் லட்சாதிபதியாக மாறிவிட முடியும்.

மேலும் படிக்க...

மண் வளத்தைப் பாதுகாக்க-பல தானிய சாகுபடி!

ரேஷன் அட்டை ரத்து கிடையாது- அட்டைதாரர்களுக்கு நிம்மதி!

English Summary: Rs 5,000 investment per month - millionaire in a few years!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.