1. Blogs

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500: மாநில அரசின் அருமையான திட்டம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Unemployed Youth

வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் நல்ல செய்தி வந்துள்ளது. இதுவரை வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் வேலையில்லா உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் பூபேஷ் பாகேல் அரசு இதனை அறிவித்துள்ளது. இந்த திட்டம் சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

உதவித்தொகை

சத்தீஸ்கர் மாநிலத்தின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஏப்ரல் 1 முதல் மாதந்தோறும் 2500 ரூபாய் வேலைவாய்ப்பின்மை உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் பலன் கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வேலையற்ற இளைஞர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ. 2500 செலுத்தப்படும்.

இதனுடன், வேலையில்லாதவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும். வேலையில்லாதவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இந்தத் திட்டத்தில் பயன்பெறும் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கணவன், மனைவி 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் அடங்கிய குடும்பத்துக்கு இது பொருந்தும். வேலையின்மை உதவித்தொகை திட்டத்திற்கு, விண்ணப்பதாரர் சத்தீஸ்கரை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் ஆண்டில் ஏப்ரல் 1 ஆம் தேதியின் படி விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து குறைந்தபட்சம் மேல்நிலைப் பள்ளி அதாவது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனுடன், விண்ணப்பதாரர் சத்தீஸ்கரின் ஏதேனும் ஒரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மையத்தில் பதிவு செய்திருப்பது அவசியம்.

இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு அரசு தரப்பிலிருந்து இந்த நிதியுதவி கிடைக்கும். இதுபோன்ற வேலையின்மை உதவித் திட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சூழலில் இப்படியொரு திட்டத்தை சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

MRP-ஐ விடவும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

அதிக பென்சன் தரும் சூப்பரான LIC பாலிசி!

English Summary: Rs.2,500 per month for unemployed youth: State government's wonderful scheme! Published on: 30 March 2023, 04:27 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.