மே 10 ஆம் தேதியான இன்று அட்சய திருதி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திதி என்பதால், இன்றைய தினம் செல்வங்களில் முதலீடு செய்தால் அவை வளரும் என்கிற நம்பிக்கை பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. பெரும்பாலான மக்கள் அட்சய திருதியன்று தங்கத்தில் முதலீடு செய்வதே வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் இன்று அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு சில மாதமாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து யாரும் எதிர்ப்பாராத வகையில் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வந்தது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரலாறு காணாத அளவிற்கு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,000 கடந்தும் விற்பனையானது. இந்நிலையில் அட்சய திருதியான இன்றும் கிராமுக்கு ரூ.90 வரை விலை உயர்ந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் பொது மக்களிடையே அதிகமாகவே உள்ளது. ஆனால், அதில் முதலீடு செய்யலாம் என்றால் அதற்கே தனியாக லோன் வாங்க வேண்டும் என்கிற நிலைமை உண்டாகியுள்ளது. இதனிடையே இன்று சென்னை மற்றும் கோவையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 வரை விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் நேற்றைய 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.6615 ஆக விற்ற நிலையில் இன்று ரூ.90 அதிகரித்து ரூ.6705 ஆக விற்பனையாகிறது. சவரன் (8 கிராம்) ஒன்று ரூ.53,640 ஆகவும் விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரன் ரூ.52,920 ஆக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்க முதலீட்டில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக சென்னை திகழ்கிறது. கோவையிலும் இதை விலை நிலவரம் என்பது கூடுதல் தகவல்.
வெள்ளி விலை:
அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், பணவீக்கம், பணமதிப்பிழப்பு போக்குகளைப் பொறுத்து வெள்ளி விலையில் மாற்றம் காணப்படுவது வழக்கம். அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் போது, வெள்ளியின் விலை அதிகரிக்கிறது. தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் நேற்றைய விற்பனை நிலையுடன் ஒப்பிடுகையில் 1 ரூபாய் 30 காசுகள் வரை அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.90 ஆகவும், கிலோ ஒன்றிற்கு ரூ.90,000 ஆகவும் விற்பனையாகிறது.
தங்கத்தின் ஹால்மார்க்கில் சந்தேகமா?
தங்க நகைகள் அதன் தூய்மையைக் குறிக்கும் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். தமிழகத்தில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதைப்போல் தங்கத்தை எடைப்போடுவதற்கு பயன்படுத்தப்படும் எடைகள் மற்றும் அளவுகள் சட்ட அளவியல் துறையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். விலைப்பட்டியலில் தங்கத்தின் எடை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
நடுத்தர மக்களின் பெரும்பாலான முதலீடு தங்கத்தை நோக்கித் தான் உள்ளது. அப்படியிருக்கும் பட்சத்தில் பணத்தை நீண்ட காலமாக சேமித்து, முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களில் விழிப்பாக இருங்கள்.
மேலும் காண்க:
pazhaya soru: பழைய சோற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?
Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா?
Share your comments