1. Blogs

இயற்கையின் அற்புத கொடை "பூஞ்சைகள்” - ஏன் தெரியுமா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
fungi characteristics

பூஞ்சை இனம் மட்டும் இல்லையென்றால் பூமியில் பல அடி உயரத்திற்கு மலை போல் கழிவுகள் நிரம்பியிருக்கும். குப்பைகள், வாடிய தாவர பாகங்கள், இறந்த மிருகங்களின் உடல் போன்றவை பூஞ்சைகளின் தாக்கத்தால் மறு சுழற்சி ( RECYCLING) பெற்று மண்ணின் வளத்தை அதிகரிக்கின்றன.

நீர்நிலைகளில் வாழும் பூஞ்சைகள் அங்கு சேரும் குப்பைகள், கழிவுகள், எண்ணெய் போன்றவற்றை நொதித்து, நீர்நிலையை மற்ற உயிரினங்கள் வாழ தகுதியுடையதாக மாற்றுகிறது. அந்த வகையில் அனைத்து உயிரினங்களும் பூஞ்சைகளுக்கு கடன்பட்டிருக்கின்றன. எனவே, பூஞ்சைகள் ”பூமியின் சுற்றுச்சூழலின் முதுகெலும்பு" எனக்கூறலாம் என்கிறார் வேளாண் ஆலோசகரான அக்ரி. சு.சந்திரசேகரன். இதுத்தொடர்பாக கிரிஷி ஜாக்ரனுக்கு வழங்கிய கட்டுரையில் பூஞ்சைகளின் இயல்பு, அதன் நன்மை, தீமைகளையும் விரிவாக பட்டியலிட்டுள்ளார், அக்ரி.சு.சந்திரசேகரன். அவற்றின் விவரம் பின்வருமாறு-

பூஞ்சைகளின் வரலாறு தெரியுமா?

பல ஆண்டுகளாக பூஞ்சைகள் தாவர இனமாக கருதப்பட்டு வந்தன. அதன் பின்னர் பூஞ்சைகள் தாவரத்தைவிட மிருகங்களுடன் அதிகளவு ஒத்திருந்தாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பூஞ்சைகள் தனி இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பூஞ்சைகள் பற்றிய அறிவியல் பிரிவுக்கு " பூஞ்சையியல்” (MYCOLOGY) என்று பெயர். பூஞ்சைகளிடம் குளோரோபில் (CHLOROPHYLL) எனப்படும் பச்சையம் கிடையாது, எனவே தாவரங்களைப் போல உணவைத்தானே தயாரித்து கொள்ள முடியாது. பூஞ்சைகள் பெரும்பாலும் உணவுக்காக மற்ற உயிரினங்களை சார்ந்தே இருக்கும். சிலவகை மண்ணிலிருந்து உணவை எடுத்துக்கொள்ளும்.சிலவகை பிற உயிரினங்களையோ, உயிரற்ற பொருளையோ, உணவுக்காக சார்ந்தே இருக்கும். இவைகளுடன் ஒட்டுண்ணிகளும், வளர்சிதை மாற்றம் செய்யும் உயிரிகளும் பூஞ்சை பிரிவில் இடம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இனப்பெருக்க முறை:

ஸ்போர்ஸ் (SPORES) எனப்படும் வித்துகள் மூலமாக இனப்பெருக்கம் செய்யும். பூசணம் (MOLD), ஈஸ்ட் ( YEAST ), காளான் (MUSHROOM) ஆகியவை பூஞ்சைகளின் சில வகைகளாகும்.

பூஞ்சைகளின் பயன்கள்:

இயற்கையின் மடியில் நடக்கும் திரை மறைவு அற்புதங்களில் இதுவும் ஓன்று. பூஞ்சைகள் உலகெங்கும் பூமியில் பரவி கிடக்கின்றன. இவை பனி, வெயில், குளிர் போன்ற பகுதியிலும் வாழும் அசாத்திய சக்தி பெற்றவை. தாவரங்கள், மிருகங்கள் என அனைத்து உயிரினங்களிலும் வளரும் வல்லமை படைத்தவை.

  • காளான்களில் சில வகைகள் மனிதர்களுக்கு ஆரோக்கியமான சத்து நிறைந்த உணவு வகைகளில் ஒன்றாக விளங்குகிறது. இவையும் ஒருவகை பூஞ்சைகளே.
  • பிரெட், கேக் ஆகிய உணவு தயாரிப்புகளில் ஈஸ்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஈஸ்ட்டும் ஒருவகை பூஞ்சைகளே.
  • சிலவகை பூஞ்சைகள் பென்சிலின் போன்ற உயிர்காக்கும் மருந்து தயாரிக்க உதவுகின்றன.
  • மதுபானங்கள், அமிலங்கள் சிஸ், சாஸ் வகைகள் தயாரிப்பதிலும் பூஞ்சைகள் பயன்படுகிறது.

பூஞ்சைகளின் தீமைகள்:

ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் மாதிரி நன்மையும் தீமையும் ஒரு சேர நிறைந்துள்ளது பூஞ்சை வகைகளில்.

  • சில உணவுகளை விரைவில் கெட்ட கெட்டு போக வைக்கின்றன.
  • சில வகைகள், மனிதர்களிடம் தாவரங்களிடம் நோய்களை உருவாக்கின்றன. தாவரங்களில் இலைப்புள்ளி, துரு, BLIGHT DISEASES, SMUT போன்ற நோய்களும், மனிதர்களுக்கு சொறி, அரிப்பு, படை போன்ற நோய்களும் பூஞ்சைகளினால் உண்டாகின்றன.
  • சில காளான்கள் மனிதர்களை கொல்லக்கூடிய விஷம் கொண்டவைகளாக இருக்கின்றன.

Read also: குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இயற்கையின் அற்புத கொடையான பூஞ்சையினை உரிய முறையில் பயன்படுத்தினால் நன்மைகளே அதிகமாக உள்ளது. அவை இல்லாத இந்த பூமியை சுற்றுசூழல் மாசின்றி பாதுகாக்க யாரலும் முடியாது என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது.

(இக்கட்டுரை தொடர்பான தகவல்களில் ஏதேனும் முரண்கள்/ சந்தேகங்கள் அக்ரி சு.சந்திர சேகரன் அவர்களை தொடர்புக் கொள்ளலாம். தொடர்பு எண்: 94435 70289)

Read more:

டிரெண்டாகும் அரக்கு காபி- எங்க விளையுது? என்ன சிறப்புனு தெரியுமா?

625 சதுர அடி நிலம் போதும்- நாட்டுக் கோழி வளர்க்க 50 சதவீத மானியம்!

English Summary: why Fungi called as a Natures Amazing Gift Published on: 09 July 2024, 12:07 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.