Business Training at the University of Agriculture:
தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில், வணிக முறையில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில், நெல்லி பானங்கள், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, பொடி மற்றும் துருவல் தயாரிப்பு குறித்து வல்லுனர்கள் கற்றுத்தரவுள்ளனர். இப்பயிற்சியில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து பயன்பெற வேண்டும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பயிற்சி (Training)
பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள், 1770 ரூபாய் பயிற்சி கட்டணத்தை முதல் நாளன்று செலுத்த வேண்டும். வேளாண் பல்கலையில், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் மே மாதம் 18,19 ஆகிய தேதிகளில் பயிற்சி நடைபெறவுள்ளது.
வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலம் நடத்தப்படும் விவசாயப் பயிற்சிகளில் கலந்து கொண்டால், பல புதிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். ஏனெனில், இங்கு பயிற்சி அளிக்கும் நிபுணர்கள் அனைவரும் விவசாயத் துறையில் நல்ல அனுபவம் மிக்கவர்கள். ஆர்வமுள்ளவர்கள், உடனடியாக தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.
வேளாண் பல்கலைக்கழகத்தின் இந்த வணிக முறைப் பயிற்சியைப் பெற்றால், தொழில் துறையில் காலடி எடுத்து வைக்க நல்ல அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை. அதோடு, மதிப்புக் கூட்டு பயிற்சியும் அளிக்கப்படுவதால், விவசாயிகளுக்கு விற்பனை பற்றிய அறிவு மேம்படும்.
மேலும் படிக்க
Share your comments