MFOI 2024 Road Show
  1. விவசாய தகவல்கள்

நெற்பயிர் வரப்புகளில் பயறு வகை- விதைப்பது எப்படி? என்ன நன்மை?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
pic: (Ariful Haque/pexels)

தற்போது குறுவை பருவ நெல் சாகுபடி ஒரு சில இடங்களில் துவங்கியுள்ள நிலையில், நெல் வரப்புகளை சுற்றி பயறு வகை பயிர்களான தட்டைப் பயறு, உளுந்து போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ளலாம். இவை குறுகிய காலத்தில் விளைச்சல் தரக்கூடியது மட்டுமின்றி நிலையான வருமானத்தை பெறவும் வழிவகை செய்யுமென வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-

தொடர்ந்து நெல் சாகுபடி செய்யப்படும் நிலங்களில் மகசூல் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் சவாலானது. பயறு வகைகளை வரப்புகளில் சாகுபடி செய்வது என்பது சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற உயிரியல் பயிர் பாதுகாப்பு முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இயற்கை இரை விழுங்கிகளான ஊசிதட்டான், பெருமாள் பூச்சி மற்றும் சிலந்திகளின் எண்ணிக்கை பன்மடங்காக பெருகும்.

பூச்சிக்கொல்லியின் பயன்பாடு குறையும்:

நன்மை செய்யும் பூச்சி (BENIFICARY INSECTS) அதிகரிப்பதால், மகசூலை குறைக்கும் தீமை செய்யும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தவும் முடியும். இதன் விளைவாக பூச்சிக்கொல்லியின் பயன்பாடு குறைவதுடன், விளைநிலத்தின் மண்வளமும் அதிகரிக்கும். மேலும், பயறு வகைகளின் வேர்மூடிச்சுகளால் காற்றில் உள்ள தழைசத்து கிரகித்து நெற்பயிர் நல்ல முறையில் வளர உதவுகின்றன. அத்துடன் வரப்புகளின் மண் ஈரத்தை தக்க வைத்து கொள்வதால் ஈரத்தன்மை நீடித்து இருக்க உதவும்.

இதுபோன்று வரப்புகளில் பயிரிடுவதால் விவசாயிகளுக்கு ஒரே நிலத்தில் இரண்டு வருமானம் கிடைக்கும். அத்துடன் அல்லாமல் களைகள் முளைப்பும் கட்டுக்குள் இருக்கும். மண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கமும் அதிகரிக்க வழிவகையுண்டு.

விதை நடவுமுறை எப்படி?

ரு ஏக்கர் வரப்புயோரங்களில் விதைக்க 1-2 கிலோ விதை போதுமானது. விதைகள் நல்ல முளைப்பு திறனுடன் தரமான விதைகளை விதைநேர்த்தி செய்து விதைக்கவோ அல்லது ஊன்றவோ வேண்டும். வரப்பின் உட்புறத்தில் கீழிலிருந்து 1 அடி உயரத்தில், ஒரு இன்ச் ( INCH ) ஆழத்தில் விதைகளை ஊன்ற வேண்டும். ஒவ்வொரு விதைக்கும் இடையேயான இடைவெளி 1 அடியாக இருத்தல் வேண்டும்.

பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தும்:

பயறு வகைகளில் உள்ள அசுவினி பூச்சிகளை சாப்பிட நிறைய பொறி வண்டுகள் வரும். இவை நெற்பயிரில் உள்ள இலைச்சுருட்டு புழு, தண்டு துளைப்பான் போன்ற பூச்சிகளின் முட்டைகளை உண்டு சேதாரத்தை குறைக்கின்றன. மகசூல் ஏக்கருக்கு 40 முதல் 50 கிலோ வரை கிடைக்கும்.

அதனுடைய இலை தளைகளை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்திடலாம். நெல் வயல் வரப்புகளில் பயறு விதைக்க கூடுதலான செலவும் பாரமரிப்பும் தேவையில்லை. எனவே விவசாயிகள் வரப்பில் பயறு விதைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல லாபம் பெறலாம்.

(மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள்/முரண்கள் இருப்பின் கட்டுரை ஆசிரியரான வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் அவர்களை பின்வரும் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.)

Read more:

உருளைக்கிழங்கு சாகுபடிக்கான இடுபொருட்களுக்கு மானியம்- வேளாண் மானியக் கோரிக்கையில் அறிவிப்பு

18 மாவட்டங்களில் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு!

English Summary: Sowing method of pulses in paddy fields and the benefits details here Published on: 26 June 2024, 02:50 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.