1. விவசாய தகவல்கள்

டிராக்டெருக்கு ரூ.5 லட்சம் வரை மானியம்- விண்ணப்பிக்க அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Subsidy up to Rs 5 lakh per tractor - Call to apply!

அரியலூர் மாவட்டத்தில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட உள்ளதாக வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இதனைப் பெறுவதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொண்டு, விண்ணப்பிக்குமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்றுதான் வேளாண்மை எந்திரமயமாக்கும் திட்டம். இது தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2021&-22 ஆம் நடப்பு நிதியாண்டில் அரியலூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட உள்ளது.

மானியம் எவ்வளவு? (How much is the subsidy?)

விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து, மத்திய அரசின் இணையத்தளம் மூலம் வழிமுறைகளின் படி மானியம் பெற்று வருகின்றனர்.

இதன்படி அதிக பட்சமாக டிராக்டர்களுக்கு ரூ.5 லட்சம்,நெல் நாற்றுநடவு செய்யும் எந்திரங்களுக்கு ரூ.5 லட்சம், வைக்கோல் கட்டும் எந்திரங்களுக்கு ரூ.9 லட்சம், பல்வகைப் பயிர் கதிரடிக்கும் எந்திரங்களுக்கு ரூ.2.50 லட்சம், சட்டிக் கலப்பை, கொத்துக் கலப்பை போன்றவற்றிற்கு ரூ.50 ஆயிரம், ரோட்டவேட்டர் என்று அழைக்கக்கூடிய சுழற்கலப்பைகளுக்கு ரூ.50 ஆயிரமும் மானியமாக அளிக்கப்படுகிறது.

ரூ.11 லட்சம்

விதை விதைப்புக் கருவிகளுக்கு ரூ.78 ஆயிரம், விசையால் களையெடுக்கும் கருவிகளுக்கு ரூ.63 ஆயிரம், பவர் டில்லருக்கு ரூ.85 ஆயிரம், அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.11 லட்சம், தென்னை ஓலைதுகளாக்கும் கருவிக்கு ரூ.63 ஆயிரம், வைக்கோல் கூட்டும் கருவிக்கு ரூ.1.50 லட்சம், புதர் அகற்றும் கருவிகளுக்கு ரூ.40 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படுகிறது.

தட்டைவெட்டும் கருவிகளுக்கு ரூ.28 ஆயிரம், நிலக்கடலை தோண்டும் கருவிகளுக்கு ரூ.75 ஆயிரம், கரும்புசோகை துகளாக்கும் கருவிகளுக்கு ரூ.1.25 லட்சம் அல்லது அவற்றின் மொத்தவிலையில் 50 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ, அத்தொகைமானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு நடப்பு 2021-&22 ஆம் ஆண்டில் வழங்கப்படுகிறது.

பதிவு அவசியம்

வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற முதலாவதாக விவசாயிகள், உழவன் செயலியில் பதிவு செய்திட வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணைய தளத்தி-ல் இணைக்கப்படும்.விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வுசெய்யலாம்.

குறிப்பிட்டவேளாண் எந்திரங்கள், கருவிகளின் இலக்கு முடிவுற்ற பின்னர் விவசாயிகள் அதே எந்திரம் அல்லது கருவியை தேர்வுசெய்தால், அவர் 1, 2, 3 என எண்ணிடப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படுவர்.

இவ்வாண்டிற்கு விண்ணப்பங்கள் புதிதாக பதிவு செய்யப்பட வேண்டும்.
ஒரு நிதியாண்டில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானியவிலையில் விவசாயிகள் வாங்கிட இயலும். அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் பெற இயலும்.

உதவி செயற் பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோர் விவசாயிகளின் நிலத்திற்கு நேரில் சென்று விவசாயிகள் வாங்கிய வேளாண் எந்திரங்கள்மற்றும் கருவிகளை ஆய்வு செய்வர்.

தகவல்

ரமண சரஸ்வதி

அரியலூர் மாவட்ட ஆட்சியர்

மேலும் படிக்க...

அக்ரி கிளினிக் தொடங்க ரூ.1லட்சம் மானியம்- அருமையான வாய்ப்பு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 24 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார் கார்த்திக்!

English Summary: Subsidy up to Rs 5 lakh per tractor - Call to apply!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.