1400 பெண் பயனாளிகளுக்கு 50 % மானியத்தில் கோழிக்குஞ்சுகள்- ஆட்சியர் அறிவிப்பு!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Chicks at 50 percent subsidy

கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக 2024-25 ஆம் ஆண்டில் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38 ஆயிரத்து 700 பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் 50 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படவுள்ள நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இத்திட்டம் எவ்வாறு அமல்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

2024-25-ம் ஆண்டில் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38 ஆயிரத்து 700 பெண்களுக்கு ரூ.6 கோடியே 24 இலட்சத்து 20 ஆயிரம் செலவில் நாட்டின கோழிக்குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழிக் குஞ்சுகள் வீதம்) 50 விழுக்காடு மானியத்தில் வழங்கும் திட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இதுத்தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-

திருச்சி மாவட்டத்தில் 1400 பயனாளிகள்:

மானியத்தில் நாட்டின கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 1400 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி ஏழைப் பெண்ணாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். பயனாளி சொந்த செலவில் ரூ.3,200 செலவில் கொள்முதல் செய்திட திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சுய சான்று வழங்கிய ரசீது சமர்ப்பிக்கப்பட்டவுடன் 50 சதவீதம் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பயனாளி இதற்கு முந்தைய ஆண்டுகளில் இலவச கறவை மாடு, ஆடு, செம்மறி ஆடு திட்டம் அல்லது கோழிப்பண்ணை திட்டங்களால் பயனடைந்திருக்க கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

இத்திட்டத்தில் பயனடைய விருப்பம் உள்ளோர் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சாதிச்சான்று நகல், கணவனால் கைவிடப்பட்டவர் அல்லது விதவை அல்லது வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ளவர் என்பதற்கான சான்று, புகைப்படம் 2, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தைகளில் கோழிகளுக்கான தேவை எப்போதும் இருக்கும் நிலையில், ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கால்நடை வளர்ப்பில் எளிய முறையில் வருமானம் ஈட்ட அறிவுறுத்தப்படுகிறார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more:

கோமியத்தினை பயிர்களுக்கு பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை என்ன?

Heavy rain alert: கோவை, திருப்பூர் உட்பட 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

English Summary: Chicks at 50 percent subsidy for 1400 women beneficiaries in Tamilnadu Published on: 09 October 2024, 04:11 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.