தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி- உழவு மேற்கொள்ள பின்னேற்பு மானியம்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
subsidy for cultivation of small grains

தரிசு நிலங்களில் உழவு மேற்கொள்ள வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வழங்கப்படும் மானியத் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-

தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்களில் வழங்கி வருகிறது.

தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டம்:

இத்துறையில் நடப்பு 2024-25 ஆம் நிதி ஆண்டில் 210.00 ஹெக்டர் பரப்பில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டத்தின் கீழ் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் சிறுதானியம் சாகுபடிக்கு உழவு மேற்கொள்ள மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் இறுதி செய்யப்பட்ட தரிசு நில தொகுப்புகளில் உள்ள விவசாயிகள் தரிசாக உள்ள நிலங்களை உழவுப் பணிகள் மேற்கொள்வதற்கு ரூபாய் 5,400 அதிகபட்சமாக ஒரு ஹெக்டருக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதில் இவ்வாண்டுக்கு சேலம் மாவட்டத்திற்கு இலக்காக 240 ஹெக்டர், ரூபாய் 11.34 லட்சத்திற்கு வரப் பெற்றுள்ளது.

இதில் டிராக்டர் சட்டி கலப்பை 5 மணி நேரம் - ரூ.1,100/- வீதம் - ரூ.5,500/- க்கு 40 % மானியமாக ரூ. 2,200/-ம், டிராக்டர் - கொத்து கலப்பை 3 மணி நேரம் - ரூ.1,100/- வீதம் ரூ. 3,300/-க்கு 40 % மானியமாக ரூ.1,320/-ம், வழங்கப்பட உள்ளது.

டிராக்டர் சுழற் கலப்பை 4 மணி நேரம் ரூ.1,200/- வீதம், ரூ.4,800/-க்கு 40 % மானியமாக ரூ. 1,920/-ம், என அதிகபட்ச மானியமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.5,400/- என உழவு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு மானியம் வழங்க அரசு நிர்ணயித்துள்ளது.

Read also: பசுந்தீவன சாகுபடிக்கு மானியத்தில் இடுப்பொருள் மற்றும் புல்நறுக்கும் கருவி!

பின்னேற்பு மானியம்:

தரிசு நிலங்கள் உள்ள உள்ள விவசாயிகள் தாங்களே தங்கள் சொந்த செலவில் தனியார் வாடகை இயந்திரங்கள் மூலமாக உழவுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் மானியத் தொகை பின்னேற்பு மானியமாக தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். விவசாயிகள் மேற்காணும் பணிகளை தாங்களே மேற்கொண்டு தரிசு நிலம் சாகுபடிக்கு உகந்த நிலமாக மாற்றப்பட்டதற்கான உறுதிமொழி சான்று அளிக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்: மேற்கண்ட மானியத்திற்கு ஆதார் அட்டை நகல், நிலச் சான்றுகளுக்கான சிட்டா பட்டா மற்றும் நில வரைபடம், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல், சிறுதானிய சாகுபடி மேற்கொள்வதற்கான உறுதிமொழி படிவம், சான்றிதழ்களை வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து பயனடையலாம்.

திட்டம் தொடர்பாக யாரை அணுகுவது?

மேலே குறிப்பிட்ட திட்டத்திற்கு மானியம் தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். சேலம் 7 குமாரசாமிப்பட்டி உதவி செயற்பொறியாளர் (வே.பொ.) அவர்களை 0427-2905277, 97510 08321 என்ற எண்களிலும், நங்கவள்ளி ரோடு, கோனுர் அஞ்சல் உதவி செயற்பொறியாளர் (வே.பொ.), அவர்களை 04298-290361, 98949 34388 என்ற எண்களிலும், ஆத்தூர் தென்னங்குடிபாளையம் உதவி செயற்பொறியாளர் (வே.பொ.), அவர்களை 04282-290585, 82205 34258 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் சேலம் மெயின் ரோடு சங்ககிரி உதவி செயற்பொறியாளர் (வே.பொ.), அவர்களை 04283-290390, 94432 49323 என்ற எண்களிலும், சேலம் 7 குமாரசாமிப்பட்டி செயற்பொறியாளர் (வே.பொ.), அவர்களை 0427- 2906266, 94430 89053 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read more:

E vaadagai: டிராக்டருக்கு ரூ.500 மட்டுமே- விவசாயிகளுக்கு ஆட்சியர் கொடுத்த அப்டேட்

1400 பெண் பயனாளிகளுக்கு 50 % மானியத்தில் கோழிக்குஞ்சுகள்- ஆட்சியர் அறிவிப்பு!

English Summary: Follow up subsidy for cultivation of small grains in barren lands at Tamilnadu farmers Published on: 21 October 2024, 02:47 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.