1. வாழ்வும் நலமும்

ஆரஞ்சு நிறத்தில் அழகு மிளரும் கேரட்டை தினமும் சாப்பிடலாமா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Can we eat orange-colored carrots every day?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உள்ளம் கவர்ந்தக் கேரட்டை அதிகமாக உண்பது உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும். கேரட் தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து வாரந்தோறும் மூன்றுநாள் எடுத்துக் கொள்ளலாம். கண்ணைக் கவரும் ஆரஞ்சு நிறம். கவர்ந்திழுக்கும் சுவை, அறிவு வளர்ச்சி முதல் அழகு வரை, அனைத்துத்துக்குமே அடித்தளம் வைப்பதில் கேரட்டின் பங்கு அளப்பறியது.

சாப்பிட்டால் மறக்க முடியாத சுவையைக் கொடுக்கும் கேரட்டை, பச்சையாகவும் சாப்பிடலாம், வேகவைத்தும் சாப்பிடலாம். எப்படிச் சாப்பிட்டாலும், அது தரும் ஆரோக்கியம் நமக்கு எப்போதுமே நல்லது.

பக்கவிளைவும்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பார்களே அதுபோன்று நல்ல சத்துக்கள் நிரம்பிய கேரட்டை அதிகமாக உண்பது உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும்.

3 நாட்கள்

கேரட், அதிகமான சத்துக்கள் அடங்கியது. உணவில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியது. அதுவே தேவையான அளவை விட அதிகமாக உண்ணும்போது பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கேரட் தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து வாரந்தோறும் மூன்றுநாள் எடுத்துக் கொள்ளலாம்.

தினமும்

அதாவது ஒரு நாளைக்கு போதுமான அளவு கேரட்சாறு- 60 மி.லி (அல்லது) கேரட் பொரியல் 1கப் (அல்லது) கேரட் சாலட் 1கப் எடுத்து கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகள்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் கேரட் அளவுடன் சாப்பிடுவது நல்லது. 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கேரட் உண்பதை தவிர்த்துக்கொள்வது நல்லது. வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகளவில் இருந்தால் கேரட் உண்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

மேலும் படிக்க...

நீலகிரியில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜாக்கள்!!

பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்த பெண்ணுக்கு விருது!

English Summary: Can we eat orange-colored carrots every day?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.