1. வாழ்வும் நலமும்

இந்தக் கீரையை சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் கல்லீரல் பிரச்சனையே வராது!

R. Balakrishnan
R. Balakrishnan
Benefits of Spinach

கீரைகள் எல்லாமே உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கின்றன. அதிலும் அரை கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அரை கீரைகளின் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது.

அரை கீரை பயன்கள் (Benefits of spinach)

  • அரை கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது.
  • அரை கீரை கடுமையான மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.
  • ஜுரம், காய்ச்சல் தீர்ந்ததும் உடலுக்கு மீண்டும் பழைய பலம் திரும்ப அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மனதிற்கும் தெம்பை ஏற்படுத்தும்.

கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டாலே கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து உறுப்பானது பலமாகும்.

அரை கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். பின்னாளில் சிறுநீரகத்தில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு உறுப்பு நன்றாக வேலை செய்யும். மேலும் சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

மேலும் படிக்க

தலைமுடியை கருமையாக்க கொய்யா இலைகளைப் பயன்படுத்த வேண்டும்!

உடல் எடையைக் குறைக்கப் பயன்படும் உலர் திராட்சை!

English Summary: Eating these greens will not cause liver problems for the rest of your life! Published on: 03 January 2022, 07:35 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.