எலுமிச்சை பழத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம், எலுமிச்சை தண்ணீரை குடிக்க சரியான நேரம் எப்போது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
எலுமிச்சை கலந்த நீர் பல்வேறு நன்மைகளைக் கொண்ட ஒரு ஆரோக்கிய பானமகும், இவை நம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கிறது.அதை எப்போது உட்கொள்வது என்பது இன்றும் விவாதத்திற்குரிய விஷயமாகவே உள்ளது. சிலர் இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என்கின்றனர், ஒருசிலர் இரவு குடிப்பது பல நன்மைகளை தரும் என்று கூறிவருகின்றனர்,
தேவையை முடிவு செய்யுங்கள்
எலுமிச்சை தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது, உங்கள் தனிப்பட்ட விருப்பங்களையும் தேவைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும், இந்த பானத்தை குடிப்பதன் மூலம் நீங்கள் எதைத் தீர்க்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எலுமிச்சை தண்ணீரின் நன்மைகள்
நீர் இழப்பை தடுக்கிறது - Keeps hydrated
எலுமிச்சை நண்ணீர் உங்கள் உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்கிறது. அதிகபடியான வேலை, அலைச்சல், உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் நீர் இழப்பை எலுமிச்சை நண்ணீர் சீர்செய்கிறது.
வைட்டமின் சி - Vitamin C
எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்த உதவுகிறது.
செரிமானத்துக்கு உதவுகிறது - Digestive Aid
எலுமிச்சை நீரின் அமிலத்தன்மை செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வீக்கத்தைத் தடுக்கிறது.
எடை மேலாண்மை - Weight Management
வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை பழத்தை கலந்து குடித்து வர உடல் எடை குறையும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எலுமிச்சை தண்ணீர் வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கிறது.
எலுமிச்சை தண்ணீர் உட்கொள்ள சிறந்த நேரம் எது?
வெறும் வயிற்றில் குடிக்கலாம்
தினமும் காலையில் எலுமிச்சை தண்ணீரை குடிப்பது செரிமான அமைப்பை சுத்தப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தைத் தொடங்கவும் உதவுவாதாக பலரும் நம்புகின்றனர். மேலும் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் இது உதவும் என்றும் கூறுகின்றனர்.
குறிப்பிட்ட நேரம் இல்லை
எலுமிச்சை நீரை புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஈரப்பதமூட்டும் பானமாக நாள் முழுவதும் அனுபவிக்கலாம். இது சர்க்கரை குளிர்பானங்களுக்கு மாற்றான நல்ல ஆரோக்கியமானதாக இருக்கும் மற்றும் உங்கள் உடலில் வைட்டமின் சி சத்துக்களை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உணவுக்கு முன் எலுமிச்சை தண்ணீரைக் குடிப்பது செரிமானத்தைத் தூண்டவும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும் உதவும்.
Read more
நாள்பட்ட நோய்களா? இதன் குறைபாடாக இருக்கலாம்... இப்போவே செக் செய்யுங்கள்!
பீட்ரூட் சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்- வேர் முதல் நுனி வரை அனைத்திலும் பலன்!
Plum | பருவ மழைக்கால நோய்களை தடுக்க ஒரு கப் "நாவல் பழம்" போதும்!
Share your comments