1. வாழ்வும் நலமும்

கோடையில் கண்களைப் பராமரிப்பது எப்படி?

Poonguzhali R
Poonguzhali R

How to care for the eyes in the summer?


சூரிய ஒளி மற்றும் அதிக வெப்பத்தின் நேரடி வெளிப்பாடு காரணமாகக் கண்களின் உள் படலம் வரண்டு விடுகிறது. இதனால் பலருக்கும் கண் எரிச்சல், கண் வலி ஆகியன ஏற்படுகின்றன. இந்த நிலையில் நம் கண்களைப் பாதுகாத்துக் கொள்வது இன்றையமையாத ஒன்றாக உள்ளது. கோடையின் வெயிலிலிருந்து கண்களை பராமரிக்கும் சில குறிப்புகளை இப்பதிவு குறிப்பிடுகிறது.

வெளியில் செல்லும் போது சன்கிளாஸ் அணியுங்கள்: சன்ஸ்கிரீன்கள் சருமத்திற்கு இன்றியமையாதது போல, கண்களுக்கான சன்கிளாஸ் அவசியம். உச்ச கோடையில் நீங்கள் வெளியேறும்போது, இது உங்கள் கண்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்பதால் பின்பற்றுவது அவசியம். சேதப்படுத்தும் புற ஊதாக் கதிர்களில் இருந்து கார்னியா எரிக்கப்படுவதிலிருந்து கண்களை சன்கிளாஸ்கள் பாதுகாக்கின்றன. கார்னியா எரிவதற்கான சில முக்கிய அறிகுறிகளாக வறட்சி, அசௌகரியம் ஆகியன இருக்கின்றன.

நீரேற்றத்துடன் இருங்கள்: உங்கள் சிறந்த கண் ஆரோக்கியத்திற்கு நல்ல அளவு திரவங்களை உட்கொள்வது அவசியம். கோடைக்காலத்தில் நம் கண்களின் கண்ணீர்ப் படலம் அடிக்கடி ஆவியாகிவிடுவதால், அதிகத் தண்ணீர் குடிப்பதால், உங்கள் உடல் ஆரோக்கியமான அளவு கண்ணீரை உற்பத்தி செய்ய உதவும். ஆனால் மது மற்றும் காஃபின் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.

உங்கள் கண்களைக் கண் சொட்டுகளால் உயவூட்டுங்கள்: சில நேரங்களில், நீரேற்றம் போதுமானதாக இருக்காது. ஒரு கண் சொட்டு மருந்தை (ஒரு கண் மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு) கையில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் கோடைக் காலம் கண் வறட்சி மற்றும் எரிச்சலுக்கு வழி வகுக்கும். இது பெரும்பாலும் கண்களில் வலி அல்லது வீக்கத்தில் முடிகிறது. இந்த நிலையிலிருந்து விடைபெற, மருந்துச் சீட்டில் கண் சொட்டுகளைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. இது கண்களை உயவூட்டுகிறது மற்றும் வலி மற்றும் வறட்சியை நீக்குகிறது.

முகத்தில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்: கோடைகாலம் என்றால் சூரிய ஒளியில் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க முகத்தில் ஊடுல்ஸ் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துதல் நல்லது. ஆனால் அதை உங்கள் கண்கள் மற்றும் கண் இமை பகுதிக்கு அருகில் மற்றும் சுற்றிப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். SPF அதிகம் உள்ள சன்ஸ்கிரீன்கள், தவறுதலாக உள்ளே சென்றால் பொதுவாகக் கண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இது நிரந்தர கண் சேதத்திற்கு வழிவகுக்காது என்றாலும், இது கண்களின் மேற்பரப்பில் இரசாயன தீக்காயங்களை ஏற்படுத்தும். சில நாட்களுக்கு இது கொஞ்சம் அசௌகரியமாகவும் வலியாகவும் இருக்கும்.

மதிய வெயிலைத் தவிர்க்கவும்: அது அவசியமில்லை என்றால், காலை அல்லது பிற்பகலின் பிற்பகுதியில் சூரிய ஒளியில் வெளியில் செல்லுதலைக் கட்டுப்படுத்துங்கள். சூரியன் பிரகாசமாகப் பிரகாசிக்கும் மற்றும் புற ஊதா கதிர்கள் உச்சத்தில் இருக்கும் நேரம் இது. ஆபத்தான புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் கண்களைப் பாதுகாப்பது உகந்த கண் ஆரோக்கியத்திற்கும் பார்வையைப் பராமரிப்பதற்கும் அவசியம்.

கோடைகாலக் கண் பிரச்சனைகளைத் தடுக்க, கண் பராமரிப்புக்கு ஒரு முன்முயற்சியான அணுகுமுறையை எடுக்க வேண்டும். வழக்கமான இடைவெளியில் உங்கள் கண் மருத்துவரைச் சந்தித்து தக்க ஆலோசனைகள் பெறுவதும் மிகுந்த பலன் அளிக்கக் கூடியதாக இருக்கும்.

மேலும் படிக்க

கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் புதினா!

மாதவிடாய் வலியைப் போக்க சில தீர்வுகள்!

English Summary: How to care for the eyes in the summer?

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.