1. வாழ்வும் நலமும்

மதிய உணவுடன் தயிர் சேர்ப்பது ஏன்? தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

Daisy Rose Mary
Daisy Rose Mary
தயிர்
தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

தயிர், நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் c மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது, இவை எலும்புகளை ஆரோக்கியாமாக வைத்திருக்க உதவி செய்கிறநது. மதிய உணவுடன் தயிர் சேர்ப்பது ஏன்? தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்ன என்பதை பார்போம்.

தயிர் சிறந்த உணவு

தயிர் என்பது குறிப்பிட்ட பாக்டீரியாவுடன் பாலை புளிக்கவைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் இதை சூப்பர்ஃபுட் என்றும் கூறுவர். தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் தயிருக்கு முக்கிய இடம் உண்டு, மேலும் இது தினசரி உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை சீர் செய்ய தயிர் பெரிதும் உதவுகிறது, மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, வலுவான எலும்புகள் மற்றும் மேம்பட்ட தோல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

சமையலில் தயிரின் பயன்பாடு

தயிர் பலவிதமான உணவுப் பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. பச்சடியில், மோரில், தயிர் சாதத்தில், மற்றும் பலவிதமான மோர் குழம்பு வகைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவையான மற்றும் சத்தான உணவுகளுக்கு தயிரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

தயிரின் சத்துக்கள்

தயிர் பல சத்துக்களை கொண்ட உணவாகும். முக்கியமான சத்துக்களாக கால்சியம், புரதம், விட்டமின்கள் (B2, B12, D), பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம் ஆகியவை உள்ளது. இவை உடல் நலத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றன.

கால்சியம்: எலும்புகளின் வளர்ச்சிக்கு, பற்கள் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

புரதம்: தசை வளர்ச்சி, செல்களின் பழுது பார்க்கும் பணிகளைச் செய்யும்.

விட்டமின் B2 மற்றும் B12: உடலின் ஆற்றலை அதிகரித்து, நரம்பு மற்றும் இரத்தச் சுருக்கங்களை பாதுகாக்க உதவும்.

போட்டாசியம்: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய்கள் வராமல் காக்கும்.
தினமும் மதிய உணவுடன் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிடுவது பல நன்மைகளை அளிக்கிறது,

குடல் ஆரோக்கியம்:

தயிரை மதியம் உணவுக்குப் பிறகு சாப்பிடுவது ரொம்பவே நல்லது. ஏனெனில், நம்மில் பலர் மதியம் உணவை சாப்பிட்டு முடித்த பின்னர், சிலர் தூங்குவது வழக்கம். இதனால் அசிடிட்டி வயிற்று உப்புசம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மதியம் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிட்டால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

தயிரில் உள்ள ஏராளமான புரோபயாடிக்குகள் குடல் நுண்ணுயிரியை பராமரிக்கின்றன. ஊட்டச்சத்து உறிஞ்சுதலை ஊக்குவித்து வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

தயிரில் உள்ள நல்ல பாக்டீரியா நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டிவிட்டு நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. நொய் தொற்றுகளைத் தடுக்கவும் முக்கிய பங்காற்றுகிறது. தயிரில் உள்ள வைட்டமின் டி, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய சத்துகள் ஊட்டச்சத்துக்களின் மூலமாக விலங்குகிறது. இது வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை நம் உடலில் அமைக்கிறது.

எலும்பு வலிமை மற்றும் அடர்த்தியை மேம்படுத்துகிறது

தயிர் கால்சியத்தின் சிறந்த மூலமாகும், இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் முக்கியமான ஒரு தனிமமாகும். தயிரில் உள்ள வைட்டமின் டி, கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது, உங்கள் உடல் இந்த அத்தியாவசிய தாதுப்பொருளை அதிகம் பெறுவதை உறுதி செய்து எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.

எடை குறைப்பு

தயிரில் உள்ள புரதம் நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இது உங்கள் பசியைக் கட்டுப்படுத்தவும், உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்கவும் உதவுகிறது. நீங்கள் உங்கள் எடையை குறைக்க விரும்பினால் உங்களின் தினசரி டயட்டில் சிறிது தயிர் சேர்க்க மறக்காதீர்கள்.

தோல் மற்றும் முடிக்கான நன்மைகள்

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த சரும செல்களை அகற்றி, ஆரோக்கியமான, பொலிவான சருமத்தை அளிக்கிறது. தயிரில் உள்ள சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. தினமும் சிறிது தயிரை சாப்பிட்டு வருவதால் முடி வலுப்பெறுவதோடு, முடி உதிர்வதையும் தடுக்கும்.

தயிர் என்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மட்டுமல்ல, கலாச்சார உணவாகவும் திகழ்கிறது. தினசரி உணவில் தயிரை சேர்த்தால் உடல் ஆரோக்கியம், நோயெதிர்ப்பு திறன், செரிமானம் ஆகியவற்றில் பல நன்மைகளைப் பெறலாம்.

Read more 

நாள்பட்ட நோய்களா? இதன் குறைபாடாக இருக்கலாம்... இப்போவே செக் செய்யுங்கள்!

பீட்ரூட் சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்- வேர் முதல் நுனி வரை அனைத்திலும் பலன்!

Plum | பருவ மழைக்கால நோய்களை தடுக்க ஒரு கப் "நாவல் பழம்" போதும்!

English Summary: Why Add curd to Lunch? What are the benefits of eating curd? Published on: 19 September 2024, 05:44 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.