1. வாழ்வும் நலமும்

சோர்வா.. மன அழுத்தமா...? உங்கள் ஹார்மோன்களை கொஞ்சம் கவனிங்க!

Daisy Rose Mary
Daisy Rose Mary
balance hormone
ஹார்மோன்கள் செயலிழந்தால், அது உடலை கடுமையாக பாதிக்கும்


ஹார்மோன்கள், நமது உடலில் ஊடுருவிச் செல்லும் சிறிய இரசாயன பொருள், நம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்திறக்கு முக்கிய காரணியாக அமைகிறது. தூக்கம் முதல் மனநிலை வரையும், இனப்பெருக்கத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன்கள் செயலிழந்தால், அது உடலை கடுமையாக பாதிக்கும்.

ஹார்மோன் சமநிலையின்மையால் சோர்வு, எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் எரிச்சல் போன்றவற்றைக் காட்டுகிறது. ஹார்மோன் சமநிலை என்பது நல்ல ஆரோக்கியத்தின் அடையாளம். 

முக்கியமான ஹார்மோன்கள்: Important Hormones

  • இன்சுலின்: இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.

  • தைய்ராய்டு ஹார்மோன்கள்: உடலின் மூலக்கூறுச் செயலியை (metabolism) ஒழுங்குபடுத்துகின்றன.

  • ஏஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன்: பாலியல் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்கள்.


ஹார்மோன் சமநிலையை மேம்படுத்த 5 இயற்கையான எளிய வைத்தியம் இதோ!

சமச்சீர் உணவு

ஒரு சமச்சீர் உணவுமுறையை நீங்கள் கடைபிடிப்பதன் மூலம் உங்கள் ஹார்மோன்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஹார்மோன்கள், ஆரோக்கியமான உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை மற்றும் கெட்ட கொழுப்புகளை உங்கள் உணவு வழக்கத்திலிருந்து அகற்றவும். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் ஈஸ்ட்ரோஜன் அளவைக் கட்டுப்படுத்த உதவும், அதே சமயம் ஆளிவிதைகளில் ஈஸ்ட்ரோஜன் போன்ற பண்புகளைக் கொண்ட லிக்னான்கள் நிறைந்துள்ளன. 

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பருப்பு தோசை, ஜங்க் உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் ஹார்மோன் சீர்கேடுகளை ஏற்படுத்தக்கூடும்.

குடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்

ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்கள் ; ஹார்மோன் ஒழுங்குமுறைக்கு அவசியமாகிறது. குடல் பாக்டீரியாவை வளர்க்க உங்கள் உணவில் ப்ரீபயாடிக்குகள் (தயிர், கேஃபிர் மற்றும் சில பழங்கள் மற்றும் காய்கறிகள்) மற்றும் புரோபயாடிக்குகள் (சப்ளிமெண்ட்ஸ் அல்லது புளித்த உணவுகள்) ஆகியவற்றைச் சேர்க்கவும்.

இரத்த சர்க்கரையின் அதிகரிப்பு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுக்கான முக்கிய குறியீடாக இருக்கலாம். இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை மெதுவாக சுரக்கும் குறைந்த கிளைசெமிக் உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். அதிக சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் கொண்ட குளிர் பானங்களை கண்டிப்பாக தவிர்க்கவும்.

தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்

போதுமான தூக்கம் வளர்சிதை மாற்றத்திக்கு முதன்மையானது. இது உங்கள் உடலையும் மனதையும் சரிசெய்யவும் புத்துணர்ச்சியடையவும் உதவுகிறது. தூக்கமின்மை உங்கள் ஹார்மோன் சமநிலையை பெரிதும் பாதிக்கும்.


படுக்கைக்கு முன், எளிமையான மூச்சுப்பயிற்சி அல்லது உலாவுதல் போன்ற செயல்களுடன் தூங்கவும். நீண்ட நேரம் மொபைல் அல்லது தொலைக்காட்சி திரையைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். உறங்குவதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் உங்கள் மொபைலை ஒதுக்கி வைக்கவும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்

உடல் செயல்பாடு உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டும் முக்கியமல்ல; இது உங்கள் மனம் மற்றும் ஹார்மோன் சமநிலைக்கு முக்கியமானது.

ஹார்மோன் சமநிலைக்கு உதவும் உடற்பயிற்சிகள் (Hormone-boosting exercises) என்பது உடலின் முக்கிய ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதற்கும், ஆரோக்கியமான நிலையை மேம்படுத்துவதற்கும் உதவும் உடல் இயக்கங்களை குறிக்கிறது. உடற்பயிற்சிகள் சில ஹார்மோன்களின் உற்பத்தியை தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகின்றன, அவை உடலின் அமைப்பு, ஆரோக்கியம், மற்றும் மனநிலை ஆகியவற்றை நேரடியாக தொடர்புகொள்கின்றன. 

ஹார்மோன் சமநிலையின்மையால் சோர்வு, எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் எரிச்சல் போன்றவற்றைக் காட்டுகிறது. ஹார்மோன் சமநிலை என்பது நல்ல ஆரோக்கியத்தின் அடையாளம். 

மன அழுத்தத்தை குறைத்தல் 

ஹார்மோன் மற்றும் மனஅழுத்தம் (Hormones and Stress) உடல் மற்றும் மனநலத்தில் முக்கிய தொடர்பு கொண்டவை. மனஅழுத்தம் நேரும்போது, உடல் சில ஹார்மோன்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும்,அதனால் உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும். முக்கியமானதாக, கோர்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோன் மனஅழுத்தம் தொடர்பான செயல்களில் முக்கிய பங்காற்றுகிறது.

மூலிகை சப்ளிமெண்ட்ஸ் 

சில மூலிகைகள் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துகின்றன. அஸ்வகந்தா அல்லது இந்திய ஜின்ஸெங், சாஸ்ட்பெர்ரி மற்றும் லாவெண்டர் போன்ற மூலிகைகள் இதற்கு உதவுகின்றன.

மேலும், இயற்கை வைத்தியம் உங்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் ஒரு முழுமையான அணுகுமுறையை உருவாக்க முடியும். இந்த நடைமுறைகளை உங்கள் அன்றாட வழக்கத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம், உங்கள் உடலின் இயற்கையான ஹார்மோன் சமநிலையை நீங்கள் பேணலாம்.

Read more

மதிய உணவுடன் தயிர் சேர்ப்பது ஏன்? தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

நாள்பட்ட நோய்களா? இதன் குறைபாடாக இருக்கலாம்... இப்போவே செக் செய்யுங்கள்!

பீட்ரூட் சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்- வேர் முதல் நுனி வரை அனைத்திலும் பலன்!

 

English Summary: you must know about Hormone imbalance and how to keep it balanced Published on: 24 September 2024, 10:32 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.