1. தோட்டக்கலை

பூச்சிகளை உண்ணும் தாவரம்- நேரில் பார்க்க அரிய வாய்ப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Insect-eating plant - a rare opportunity to see in person!

Credit : Dinamalar

பூச்சி உண்ணும் தாவரம் ? இது குறித்துக் கேள்விப்பட்டதுண்டா நீங்கள்? பள்ளி பாடப்புத்தகத்தில் நீங்கள் படித்த நெப்பென்டிஸ் (nepenthes) என்ற அந்த விசித்திர தாவரம், கோவையிலும் இருக்கிறது.

நெப்பென்டிஸ் (nepenthes)

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், பூச்சியியல் அருங்காட்சியகத்தின் பின்புறம் இருக்கும் இந்த செடியை, நீங்கள் பார்வையிடலாம்.ஒரு சில தாவரவியல் ஆர்வலர்கள், இந்தச் செடியை வீட்டில் வளர்க்கின்றனர்.

செடியின் சிறப்பம்சம் (The highlight of the plant)

  • இந்த செடிகளில் இருக்கும் ஒரு பை அல்லது குடுவை போன்ற அமைப்புதான் பூச்சிகளை கவர்ந்திழுக்கிறது.

  • ஈ, கொசு போன்ற சிறு பூச்சிகள், இந்த பை போன்ற அமைப்புக்குள் சென்றால், அந்த தாவரம் அப்படியே விழுங்கி செரிமானம் செய்து விடும்.

  • குடுவையில் 'பெப்சின்' என்ற திரவமும், குடுவையின் வாயில் தேன் சுரப்பிகளும் இருக்கின்றன.

  • கவர்ச்சிகரமான வண்ணம், புள்ளிகள், திட்டுக்களுடன் இருக்கும் குடுவை, சிறு பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்கிறது.

  • தேன், நிறம், வாசனையால் கவரப்பட்டு செல்லும் பூச்சிகள், குடுவையில் சறுக்கி கீழே விழுகின்றன.

  • உள்நோக்கி வளைந்திருக்கும் குடுவையின் முடிகளால், கீழே விழுந்த பூச்சியினங்கள் தப்பி மேலே வர முடிவதில்லை.

பெப்சின் திரவம் (Pepsin fluid)

இப்படி வசமாக சிக்கிக்கொண்ட பூச்சிகளை, குடுவையில் இருக்கும் பெப்சின் திரவம் செரிமானம் செய்து விடுகிறது.'இதன் மூலம் தனக்கு பற்றாக்குறையாக இருக்கும் நைட்ரேட், பாஸ்பேட் சத்துக்களை இந்த தாவரம் பெற்றுக்கொள்கிறது'

தகவல்
தாவரவியல் ஆய்வாளர்கள்.

மேலும் படிக்க...

வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்!

புதிய தொழில்முனைவோருக்கு தொலை நோக்குப்பார்வை அவசியம்!

English Summary: Insect-eating plant - a rare opportunity to see in person!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.