Credit: Sunrise
பயிர்களின் சீரான வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துக்கள் குறிப்பிட்ட விகித அளவுகளில் தேவைப்படுகின்றன. இதுவே சமச்சீர் கூட்டம் எனப்படுகிறது.
தழைச்சத்து குறைபாடு (Nutrition deficiency)
தழைச்சத்தானது பயிரில் வேகமாக நகர்ந்து செல்லக்கூடியது. எனவே மண்ணில் தழைச்சத்து பற்றாக்குறை ஏற்படும் போது, பயிரின் முதிர்ந்த இலைகளில் உள்ள தழைச்சத்து இளம் இலைகளுக்கு எளிதில் நகர்ந்து சென்று விடுகிறது.
எனவே, தழைச்சத்து குறைபாடு அறிகுறிகள் முதலில் முதிர்ந்த இலைகளில் தோன்றுகின்றன.
முழு வளர்ச்சி அடைந்துள்ள செடிகளில் ஏக காலத்தில் இளம் இலைகள் வெளிர் பழுப்பு நிறத்திலும், நடுப்பகுதி இலைகள் வெளிர் மஞ்சள் நிறம் முதல் வெளிர் பழுப்பு நிறம் வரையிலும் முதிர்ந்த இலைகள் காய்ந்த நிலையிலும் காணப்படும்.
மணிச்சத்து குறைபாடு (Manic deficiency)
மணிசத்தானது பயிரில் வேகமாக நகர்ந்து செல்லக்கூடியது எனவே, மண்ணில் மணிச்சத்து பற்றாக்குறை ஏற்படும் போது பயிரின் முதிர்ந்த இலைகளில் இருந்து இலைகளுக்கு மணி சத்து எளிதில் நகர்ந்து சென்றுவிடுகிறது.
மணி சத்து குறைபாடு அறிகுறிகள் முதலில் முதிர்ந்த இலைகளில் தோன்றுகின்றன. நாளடைவில் இந்த அறிகுறிகள் அந்த இலைகளில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இயல்பாகக் காணப்படுகின்றன
சாம்பல் சத்து குறைபாடு (Gray nutrient deficiency)
சாம்பல் சத்து குறைபாடு உள்ள பயிரில் இடைக்கணுக்கள் குட்டையாக குறுகி காணப்படுகின்றன.பயிர் குட்டையாகிவிடுகிறது. பயிர் பசுமை இழந்து ஆரோக்கியம் குன்றி காணப்படுகிறது. வேகமாக வளரும் இளம் இலைகள் பயிரின் முதிர்ந்த பாகங்களிலிருந்து சாம்பல் சத்தை எடுத்துக் கொள்கின்றன. எனவே. சாம்பல் சத்து குறைபாடு அறிகுறிகள் முதலில் முதிர்ந்தஇலைகளில் தோன்றுகின்றன.
அறிகுறிகள் (Symptoms)
வேகமாக வளரும் இளம் இலைகள் பயிரின் முதிர்ந்த பாகங்களிலிருந்து சாம்பல் சத்தை எடுத்துக் கொள்கின்றன. எனவே, சாம்பல் சத்து குறைபாடு அறிகுறிகள் முதலில் முதிர்ந்த
இலைகளில் தோன்றுகின்றன. இளம் இலைகள் பச்சை நிறத்தில் ஆரோக்கியமாக காணப்படுகின்றன. ஆரம்பக் கட்டத்தில் முதிர்ந்த இலைகளில் பகுதிகள் பசுமை இழந்து மஞ்சள் நிறத்தில் சோகை பிடித்தது போல காணப்படுகின்றன. பின்னர் மஞ்சள் நிறம் இலைகளின் விளிம்பு முழுவதும் பரவி விடுகிறது. அதன் பின்னர் இலைகள் வெளிர் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து விடுகின்றன.
சுண்ணாம்பு சத்து குறைபாடு (Calcium deficiency)
சுண்ணாம்புச்சத்து குறைபாடு உள்ள பயிர் வளர்ச்சி குன்றி குட்டையாகத் தடித்த தண்டுகளுடன் காணப்படும்.
மேலும் விபரங்களுக்கு, முனைவர். பா.குணா, உதவி பேராசிரியர், வேளாண் விரிவாக்க துறை வேளாண்புலம், மின்னஞ்சல் : [email protected], க.ம.புகழ்மணி, சி.சக்திவேல், மின்னஞ்சல்: [email protected], இளங்கலை வேளாண்மை மாணவர்கள், பிரிஸ்ட் பல்கலைக்கழகம், தஞ்சையைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி?
TNAUவின் மாதாந்திர நேரடி அங்கக வேளாண்மை பயிற்சி- அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது!
கலப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் என்ன ஆபத்து?
Share your comments