தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககம் சார்பில் ஆறுமாதகால சான்றிதழ் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியைப் பெறுவதன் மூலம் நீங்கள் சிறந்த தொழில் முனைவோராக மாறமுடியும்.
சிறப்பம்சங்கள்
-
சுய வேலை வாய்ப்பு பெறலாம்
-
விற்பனையாளர்களாகலாம்
-
உற்பத்தியாளர் ஆகலாம்
-
விவசாயத் தொழில் முனைவோர் களாகவும் வங்கிகளில் உதவி பெற முடியும்
-
விவசாயத் தொழில் பயிற்சி கொடுப்பவர்களாகச் செயல்படலாம் விவசாய எந்திரங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்
சான்றிதழ் பாடங்கள்
-
அலங்காரத் தோட்டம் அமைத்தல்
-
அங்கக வேளாண்மை
-
பட்டுப் புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்
-
நவீன பாசன முறை மேலாண்மை
-
திடக்கழிவுகள், மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பங்களும்
-
தேனீ வளர்ப்பு
-
நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்
-
காளான் வளர்ப்பு
-
ரொட்டி மற்றும் சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள்
-
தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள்
-
மூலிகைப் பயிர்கள்
-
பண்ணைக் கருவிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்துதல்
-
தோட்டக்கலைப் பயிர்களுக்கு நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர் பெருக்க முறைகள்
-
பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்துதல்
-
சிறுதானிய சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல்
-
மலர் சாகுபடித் தொழில்நுட்பங்கள்
-
பருத்தி சாகுபடித் தொழில்நுட்பங்கள்
-
காய்கறி விதை உற்பத்தி
-
நவீன களை மேலாண்மை
-
வீடுதோறும் விவசாயம்
-
தீவன உற்பத்தி
-
இரசாயனம் மற்றும் நச்சுப் பொருட்கள் கையாளுதல்
-
தோட்ட மேற்பார்வையாளர்களுக்கான திறன் மேம்பாடு
-
தேயிலை சாகுபடி நுட்பங்கள் (கோத்தாரி வேளாண்மை மையம், குன்னூர்)
-
தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான வேளாண் அடிப்படையிலான ஆடை வடிவமைப்பு
-
வனவியல் தோட்ட தொழில்நுட்பம்
-
தொழில்துறை வேளாண் வனவியல்
- நேர்முகப்பயிற்சி வகுப்புகள்
மாதம் ஒரு சனிக்கிழமைகளில் நடைபெறும்
தகுதி
10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் பயிற்சி கட்டணம் ரூ. 2,500
வயது
வயது வரம்பு இல்லை
மொழி
எளிய தமிழ் வழிக் கல்வி
தங்களது மாவட்டங்களில் உள்ள வேளாண் கல்லூரிகள், ஆராய்ச்சி மையங்கள்,வேளாண் அறிவியல் மையங்களில் படிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
மேலும் விபரங்களுக்கு 04226611229 /94421 11048 /9489051046 என்ற தொலைபேசி எண்களையும், odl@tnau.ac.in. என்ற மின்னஞ்சல் மற்றும் www.tnau.ac.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
பட்டுப் புழு வளர்ப்பை அதிகரிக்க மத்திய அரசின் திட்டம் - தேனி விவசாயிகளுக்கு வாய்ப்பு
நீங்களும் அஞ்சலக முகவராக வேண்டுமா?- சிறிய முதலீட்டில் நல்ல லாபம் தரும் தொழில்!
Share your comments