A farmer who set up a solar pumpset! Appreciated Prime Minister Modi!!
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிவருகின்றார். இந்த நிலையில், இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று(30/10/2022) பேசினார்.
அப்போது அவர், சூரிய சக்தியில் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. சூரிய சக்தியை இந்தியா பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறது. இன்று நாம் மிகப்பெரிய சூரியச் சக்தியை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டோம். நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையைச் சோலார் எரிசக்தி எவ்வாறு மாற்றுகிறது என்பதும் ஆய்வுப் பொருளாகும். சோலார் சக்தி மூலம் பணத்தை மிச்சம் செய்ய முடியும்.
தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழிலன் என்கிற விவசாயி, பிரதமர் குஷூம் யோஜனா திட்டத்தின் பலனை அடைந்துள்ளார். அவரது விவசாயப் பண்ணையில் 10 குதிரைத்திறன் கொண்ட சோலார் பம்ப் செட்டை அமைத்துள்ளார். இதன்மூலம் அவர் பண்ணையில் விவசாயத்திற்கு எனப் பெரிதாக எதுவும் செலவு செய்வது கிடையாது. விவசாய நிலத்தில் பாசனம் செய்ய அரசின் மின் விநியோகத்தை அவர் நம்பியிருக்கவில்லை. இதேபோல் சூரிய சக்தி மூலம் பல விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
குஜராத்தின் மோதிரா எனும் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் சோலார் எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சூரிய மின்சக்தி போல் விண்வெளித் துறையிலும் இந்தியா பல சாதனைகளைப் படைத்துக்கொண்டு உள்ளது.
இந்தியாவின் சாதனைகளை உலகம் ஆச்சர்யத்துடன் பார்க்கிறது. சில தினங்களுக்கு முன் விண்வெளியில் 36 செயற்கைக்கோள்களை இந்தியா நிலைநிறுத்தியது. இந்த சாதனை இந்தியாவிற்கு தீபாவளி பரிசாக அமைந்தது.
இந்திய இளைஞர்களுக்காக விண்வெளித்துறை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதும், புரட்சிகரமான மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. டிஜிட்டல் துறையிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க
Share your comments