செம்மை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள், விருது பெற விண்ணப்பிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் சார்பில் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2024-25-ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ராபீ பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிரினை காப்பீடு செய்வது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:
தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் மூலம் உரிய தொழில்நுட்பத்தினை கடைபிடித்து செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மாநிலத்தில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் ஐந்து லட்சம் சிறப்பு பரிசு மற்றும் ரூபாய் ஏழாயிரம் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும்.
யாரெல்லாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்?
இப்போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிக்கு குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகையாகவோ இருக்கலாம். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் இரகத்தை சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். மேலும் விவசாயி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும். இப்போட்டியில் பங்கு பெறும் விவசாயிகளின் வயலில் குறைந்தபட்சம் 50 சென்ட் பரப்பளவில் பயிர் அறுவடை செய்யப்படும்.
எனவே மேற்குறிப்பிட்ட தகுதி கொண்ட விவசாயிகள் இப்போட்டியில் பங்கு பெற விரும்பினால் நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் ஆதார் அட்டையுடன் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை நேரில் அணுகி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பதிவு கட்டணமாக ரூபாய் நூற்று ஐம்பது மட்டும் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டி நடுவர்கள் முன்னிலையில் பயிர் அறுவடை செய்யப்படும்.
எனவே மேற்குறிப்பிட்ட தகுதி கொண்ட விவசாயிகள் இப்போட்டியில் பங்கு பெற விரும்பினால் நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் ஆதார் அட்டையுடன் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை நேரில் அணுகி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பதிவு கட்டணமாக ரூபாய் நூற்று ஐம்பது மட்டும் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டி நடுவர்கள் முன்னிலையில் பயிர் அறுவடை செய்யப்படும்.
Read also: 18 ஆண்டுக்கால நம்பிக்கை: ராஜஸ்தான் விவசாயியின் வெற்றிக்கு வித்திட்ட மஹிந்திரா டிராக்டர்
வெற்றியாளர்களை அறிவிப்பதில் வேளாண்மை இயக்குநர் அவர்களின் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது. திருச்சிராப்பள்ளி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இப்போட்டியில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கலந்து கொண்டு சிறப்பித்திடுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப., வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
ராபி பருவ பயிர்காப்பீடு:
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தாங்கள் சாகுபடி செய்த தோட்டக்கலைப் பயிர்களை காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளான வறட்சி, வெள்ளம் மற்றும் மகசூல் இழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காப்பீடு பெறுவதற்கு இத்திட்டம் மிக பயனுள்ளதாகும்.
2024-25-ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ராபீ பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய வற்றல் மிளகாய்க்கு 31.01.2025-ம், வெங்காய பயிருக்கு 15.02.2025-ம், வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு 28.02.2025-ம் வரையிலும் கால அவகாசம் உள்ளதால் பிரீமியம் தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு வெங்காய பயிருக்கு ரூ.2062.46/-ம், வற்றல் மிளகாய்க்கு ரூ.1220.18/-ம், வாழைக்கு ரூ.3460.48/-ம், மரவள்ளி பயிருக்கு ரூ.1632.68/-ம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது இ-சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்பயிர் காப்பீடு பதிவு செய்திட நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன், பதிவுசெய்யும் விவசாயியின் பெயர், விலாசம், நிலபரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்து, உரிய தொகையினை செலுத்தி, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
Read more:
சிறுதானியங்களில் புதிய இரகங்கள் சாகுபடி- தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ்!
எனது வெற்றிக்கான பங்காளி மஹிந்திரா டிராக்டர்: குர்மேஜ் சிங்கின் எழுச்சியூட்டும் கதை
Share your comments