1. செய்திகள்

B.E, B.Arch படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
B.E, B.Arch first year courses apply online from tomorrow

முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு, ஜூன் 4 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் அறிவித்துள்ளார். அதுக்குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு-

முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு /அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்/அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள்/ அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியற் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான 2023-24 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற கீழ்க்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1) விண்ணப்பிக்கும் முறை: https://www.tneaonline.org  or https://www.tndte.gov.in  என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவுசெய்யவேண்டும்.

2) இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள், தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA Facilitation Centers (TFCs) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் மேற்காணும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள்

துவங்கும் நாள்: 05.05.2023 முடிவுறும் நாள்: 04.06.2023

3) பதிவுக் கட்டணம்: பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking / UPI இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள், "The Secretary TNEA" payable at Chennai. என்ற பெயரில் 05.05.2023 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்.

OC / BC / BCM / MBC & DNC பிரிவினருக்கு பதிவுக்கட்டணம் ரூ.500 மற்றும் SC / SCA / ST பிரிவினருக்கு பதிவுக்கட்டணம் ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4) கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்காணும் இணையதள வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ளலாம்.

5) மாணக்கர்கள் இணையதளம் வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும் பொழுதே அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.

மேற்கண்ட அசல் சான்றிதழ்களை இணையதள வாயிலாக சரிபார்க்கும்போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அந்த குறிப்பிட்ட மாணாக்கரின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் TFC மையத்திற்கு நேரடியாக வந்து சரிசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேரடியாக நடைபெறும்.

6) B.E., B.Tech (Lateral Entry and Part Time) பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

மேலும் தகவல்களுக்கு தொடர்பு எண்: 044 - 2235 1014 / 1015,

அழைப்பு எண்: 1800 - 425 - 0110

Email-  tneacare@gmail.com

pic courtesy- anna university

மேலும் காண்க:

Cyclone Mocha- இந்த ஆண்டின் முதல் புயல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

English Summary: B.E, B.Arch first year courses apply online from tomorrow Published on: 04 May 2023, 06:33 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.