![](https://kjtamil.b-cdn.net/media/32147/bcaa.jpg?format=webp)
இந்திய வேளாண் வேதியியல் துறையில் முன்னணியில் உள்ள பாரத் செர்டிஸ் அக்ரிசயின்ஸ் லிமிடெட் (BCA-Bharat Certis AgriScience Ltd) நிறுவனம், டெல்லியிலுள்ள தனது தலைமை அலுவலகத்தில் அதன் புதிய லோகோவை வெளியிட்டது. இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் உள்ள ஊழியர்களுடன் நேரிடையாகவும், மெய்நிகர் நிகழ்வு வாயிலாகவும் நடைப்பெற்றது.
புதிய லோகோவானது புதுமை, வளர்ச்சி மற்றும் நிலையான விவசாய வளர்ச்சிக்கான BCA-யின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. புதிய இலச்சினையில் இடம்பெற்றுள்ள நீலம் நிறமானது நிறுவனத்தின் மரபைக் குறிக்கிறது. மற்றொரு நிறமான பச்சை, ஒரு நிலையான எதிர்காலத்திற்கான அதன் வாக்குறுதியை குறிக்கிறது.
BCA:புதிய லோகோவின் கருப்பொருள்?
மேற்குறிப்பிட்ட இரண்டும் ஒருங்கிணைந்து பொருள் தருவது யாதெனில், பாரம்பரியத்துடன் ஒன்றிணைந்து அதிநவீன கண்டுபிடிப்புகளுடன் சங்கமிக்க உறுதிபூண்டுள்ள மற்றும் வேளாண் அறிவியல் துறையில் முன்னோக்கிச் சிந்திக்கும் முதன்மையாளரான BCA-யின் பரிணாம வளர்ச்சியை உள்ளடக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BCA 1977 ஆம் ஆண்டு எஸ்.என்.குப்தாவால் நிறுவப்பட்டது. பல தசாப்தங்களாக, இது பாரத் பூச்சிக்கொல்லிகள் லிமிடெட் ஆக வளர்ந்து விவசாயிகளின் நம்பிக்கையினை பெற்றது. 2020 ஆம் ஆண்டில், மிட்சுய் & கோ., லிமிடெட் மற்றும் நிப்பான் சோடா கோ., லிமிடெட் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து ஒரு கூட்டாண்மை நிறுவனமாக பாரத் செர்டிஸ் அக்ரிசயின்ஸ் லிமிடெட் என மாறி உலகளாவில் தன் தடத்தை வலுப்படுத்தியது.
"புதிய லோகோ நமது பரிணாம வளர்ச்சியையும் பிரகாசமான எதிர்காலத்திற்கான அர்ப்பணிப்பையும் குறிக்கிறது" என்று நிர்வாக இயக்குனர் டோரு தமுரா விளக்கம் அளித்துள்ளார்.
Read more:
வேளாண் தொழில் முனைவோருக்கு குட் நியூஸ்- StartupTN உடன் COXBIT புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோனோகார்பஸ் மரத்திற்கு போட்டாச்சு தடை- இவ்வளவு தீமையா இந்த மரத்தால்?
Share your comments