அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், அதனோடு இணைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக பகுதிகளில் நிலவுவதாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி மற்றும் கடலோர தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைபொழிவு
கடந்த 24 மணி நேரத்தில் வானமாதேவி (கடலூர்) 7 செ.மீ, சூலகிரி (கிருஷ்ணகிரி ) 6 செ.மீ, ஓசூர் (கிருஷ்ணகிரி), கடலூர் (கடலூர்), மரக்காணம் (விழுப்புரம்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 5செ,மீ, போளூர் (திருவண்ணாமலை), செய்யூர் (செங்கல்பட்டு), SRC குடிதாங்கி (கடலூர்) தலா 4 செ.மீ, கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), தண்டரம்பேட்டை (திருவண்ணாமலை), பண்ருட்டி (கடலூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), அரூர் (தர்மபுரி), தர்மபுரி P.T.O (தர்மபுரி), செங்கம் (திருவண்ணாமலை) தலா 3 செ.மீ, திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), ஏற்காடு (சேலம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), விழுப்புரம் (விழுப்புரம்), பெலந்துரை (கடலூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) தலா.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அக்டோபர் 22, வடக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் ஒடிசா கடலோர பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 23, வடமேற்கு வங்க கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
கிசான் முறைகேடு : பணத்தை திரும்ப செலுத்தாவிட்டல் அரசு சலுகைகள் நிறுத்தம்!
விவசாயக் கடன் தள்ளுபடி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு!
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22% சதவீதமாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை - அமைச்சர் காமராஜ்!
Share your comments