கரூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். மேலும், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கருவி மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
விவசாயிகள் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் போது எதிர்பாராத காலநிலை மாற்றங்களால் இழப்புகள் ஏற்படுகிறது. அத்தகைய காலகட்டங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதன் மூலமாக தவிர்க்கலாம்.
பயிர் காப்பீடு விவரம்:
கரூர் மாவட்டத்தில் தற்போது 2024 ரபி பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, தக்காளி, மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் ரபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட குறுவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் வாழை, மரவள்ளி, தக்காளி, வெங்காயம் மற்றும் மிளகாய் போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள் பின்வருமாறு: விவசாயின் புகைப்படம்(பாஸ்போர்ட் அளவு), ஆதார், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவை.
பயிர் காப்பீடு மேற்கொள்ள பதிவு கட்டணத்துடன் எக்டருக்கு பிரீமியத் தொகையாக தக்காளிக்கு ரூ.1768/-ம், வெங்காயத்திற்கு ரூ.2060/-ம், மிளகாய்க்கு ரூ.1220/-ம் 31.01.2025 தேதிக்குள்ளும், வாழைக்கு ரூ.3460/-ம் மற்றும் மரவள்ளிக்கு ரூ.4082/-ம் 28.02.2025 தேதிக்குள்ளும் பிரீமியம் தொகையினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது இ-சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறதென கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
தானியங்கி பம்புசெட் கருவி- மானிய விவரம்:
கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கருவி மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்கருவியைப் பயன்படுத்தி விவசாய கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்ப்செட்டுகளை வீட்டில் இருந்தபடியும், வெளியூர்களில் இருந்தபடியும் இயக்கவும், நிறுத்தவும்முடியும். இதற்கு மானியமாக சிறு/குறு /பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கருவியின் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.7000/- வரை மானியமாக வழங்கப்படும்.
மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40% அல்லது அதிகபட்சமாக ரூ.5000/- வரைமானியமாக வழங்கப்படும். தற்போது, கரூர் மாவட்டத்தில் பொதுப்பிரிவுக்கு 152 எண்களும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு 5 எண்களும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் கரூர் மற்றும் குளித்தலை வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், கரூர் மற்றும் குளித்தலை உபகோட்டங்களுக்கு உட்பட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே.பொ)9443404531 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.
Read more:
சிறு குறு விவசாயிகள் பவர் டில்லர் வாங்க 20 சதவீதம் கூடுதல் மானியம்!
மானியத்தில் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவி
Share your comments