Crackers time for Deepavali
தமிழகத்தில் தீபாவளியன்று எப்போதெல்லாம் பட்டாசு வெடிக்கலாம், எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பட்டாசு (Crackers) வெடிக்கும் நேரக்கட்டுப்பாட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பட்டாசு வெடிக்கும் நேரம்
இது தொடர்பாக தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணிவரை பசுமை பட்டாசு (Green Crackers) வெடிக்க அனுமதிக்கப்படுகிறது.
ஒலி மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், நீதிமன்றங்கள், மத வழிபாட்டுத்தளங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவர்க்க வேண்டும்.
தீப்பிடிக்கக்கூடிய பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். காற்று மாசை ஏற்படுத்தாத வகையில் மக்கள் பொறுப்புடன் பண்டிகையை கொண்டாட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
பால் பாக்கெட் கவர்களை இனிமே குப்பையில் போடாம இப்படி பயன்படுத்துங்கள்!
Share your comments