1. செய்திகள்

பயிர் சேத அறிக்கையை அரசிடம் ஒப்படைக்கும் வேளாண் துறை!

KJ Staff
KJ Staff
Crop Damage
Credit : Dinamani

நிவர் புயலால் (Nivar storm) ஏற்பட்ட பயிர்சேதங்கள் குறித்த அறிக்கையை, அரசிடம் இன்று வேளாண் துறையினர் (Agriculture Department) ஒப்படைக்க உள்ளனர்.

பயிர்ச் சேதம் குறித்து ஆய்வு:

நிவர் புயலால், கடலுார், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, வேலுார், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால், பல ஏக்கர் அளவிலான நெல் பயிர்கள் (Paddy Crop), எண்ணெய் வித்துக்கள் (Oil), பருப்பு வகைகள் உள்ளிட்டவை நீரில் மூழ்கின. விவசாயிகள், நஷ்டத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி (Kagandeep Singh pedi), இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோர், இம்மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

பயிர் சேத அறிக்கை:

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைகளின் வாயிலாக, இம்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்த கணக்கெடுப்பு (Survey) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல இடங்களில் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டதால், நீரில் மூழ்கிய பயிர்களின் பாதிப்பு குறைந்துள்ளது. பயிர் சேதத்தை விரைவில் மத்திய குழு ஆய்வு செய்ய உள்ளது. எனவே, பயிர் சேதங்கள் (Crop damage) குறித்த அறிக்கையை, இன்று அரசிடம் ஒப்படைக்க வேளாண்துறை முடிவு செய்துஉள்ளது.

நிவாரணம்:

பயிர் சேத அறிக்கையை வேளாண்துறை, அரசிடம் ஒப்படைத்த பிறகு, பயிர்க் காப்பீடு (Crop Insurance) செய்து விவசாயிகளுக்கு, பயிர்க்காப்பீட்டு நிவாரணம் வழங்கப்படும். பயர்க் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு, பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பயிர் சேதங்களுக்கான நிவாரணம் விரைவாக அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகள் தற்போதைய எதிர்ப்பார்ப்பு.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

நிவர் புயலால் உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு!

உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வேண்டுகோள்!

English Summary: Department of Agriculture to submit crop damage report to the government! Published on: 30 November 2020, 07:59 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.